புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம் : புரொஜக்ட் சி – சாப்டர் 2 பணவேட்டையில் குறி வைத்து தடுமாறும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 2.5/5

0
258

புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம் : புரொஜக்ட் சி – சாப்டர் 2 பணவேட்டையில் குறி வைத்து தடுமாறும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 2.5/5

சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் புரொஜக்ட் சி – சாப்டர் 2 (Pசழதநஉவ ஊ – ஊhயிவநச 2) திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினோ.
இதில் ஸ்ரீP, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, பாலாஜி வெங்கட்ராமன், கோவை குருமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: சிபு சுகுமாரன்,ஒளிப்பதிவு : சதீஷ், படத்தொகுப்பு : தினேஷ் காந்தி, பாடல்கள்- வினோ, பாடியவர்கள்-நிக்கில் வி கமல்,அதிதி தினேஷ், சிபு சுகுமாரன், நியாஸ் நிஜ்ஜு, உடைகள்- ஹீனா கோட்ச்சே,  கலை- ஹரி பிரசாத் பால், லைன் தயாரிப்பு-நிவேதிதா நாயர், நிர்வாக தயாரிப்பு-நவநீத், சஞ்சய், ஒப்பனை- உதய சங்கரி, மக்கள் தொடர்பு : தர்மா மற்றும் சுரேஷ்சுகு

கேமிகல் பட்டதாரியான ஸ்ரீ கிடைத்த வேலையை செய்து கொண்டு வாடகை வீட்டில் வசிக்கிறார். அதிலும் சில பிரச்சனை ஏற்பட வேலையை இழந்து வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு வயதான பணக்கார முதியவர் ராம்ஜியை பார்த்துக் கொள்ளும் வேலை கிடைக்க தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அந்த வீட்டிற்கு செல்கிறார். வீட்டு வேலை, சமையலுக்கு வசுதா கிருஷணமூர்த்தி  என்ற பெண் இருக்க நட்புடன் பழகும் ஸ்ரீ பின்னர் அவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அந்த முதியவரின் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு, முதியவரின் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். இவர்களை தவிர முதியவர் ராம்ஜியை பிசியோதரபிஸ்டாக சாம்ஸ் வந்து அடிக்கடி பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் திடீரென்று ஒருவர் தொலைபேசி மூலம் ஸ்ரீயிடம் மாத்திரை ஒன்றை வீட்டிலிருந்து எடுத்துத் தருமாறும் அதற்கு லட்சங்களில் விலை பேச, அதிர்ச்சியாகும் ஸ்ரீ அதன் பின் முதியவர் ராம்ஜி அறிவியல் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய ஆராய்ச்சி கூடம் இருக்கும் அறையில் பல ஆராய்ச்சி கட்டுரைகள், மாத்திரைகள் இருப்பதை அறிந்து அந்த மாத்திரைகள் மனிதரின் வயதை குறைத்து வீரியத்தை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து மாத்திரைகளை விற்று லட்சக்கணக்கான பணத்தை சேர்த்து மறைத்து வைக்கிறார். வீட்டு வேலை செய்யும் வசுதாவிடம் இந்த விஷயத்தை கூறி பணத்தை எடுத்துக் கொண்டு ஒடி விடலாம் என்ற ஐடியா தருகிறார். அவளும் ஸ்ரீயிடம் அன்பாக பேசி, தன் கூட்டாளியுடன் சேர்ந்து பணத்தை அபகரிக்க திட்டம் போட்டு ஸ்ரீயை அடித்து கட்டி போட்டு பணம் இருக்கும் இடத்தை சொல்லமாறு சித்ரவதை செய்கிறார். இதனிடையே பிசியோதெரபிஸ்ட் சாம்ஸ{ம் வர இந்த ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டு தான் இங்கே வந்து போகிறார் என்ற உண்மை வெளிப்படுகிறது. ஸ்ரீ மறைந்த வைத்திருந்த பணத்தையும், மாத்திரையையும் எங்கே இருக்கிறது என்ற உண்மையை சொன்னானா? வசுதா பணத்தை இவர்களிடமிருந்து பறிந்து கொண்டாளா? சாம்ஸ் தேடியது கிடைத்ததா? முதியவர் என்ன ஆனார்? இறுதியில் நடந்த திருப்பம் என்ன? யார் கையில் பணம் கிடைத்தது? என்பதே க்ளைமேக்ஸ்.

படத்தை தயாரித்து நடித்தும் இருக்கிறார் ஸ்ரீP. பணம் இல்லாமல் தவிக்கும் போதும், பணம் கிடைத்த பிறகு  மாறும் விதத்தை வித்தியாசமாக காட்டி இறுதியில் கிடைத்த பணத்தையும் காப்பாற்ற முடியாமல் அடி வாங்கி கதறும் போதும்   விட்டால் போதும் என்று உண்மையை சொல்லும் நேரத்தில் மனதில் நிற்கிறார்.

வீட்டு வேலை செய்யும் பெண்ணாக வசுதா கிருஷ்ணமூர்த்தி அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு போல்டாக அசால்டாக பேசும் வசனம், பின்னர் கவர்ச்சியால் காரியத்தை சாதித்து கொண்டு கழட்டி விடும் கதாபாத்திரம். பணத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் சென்று, தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுத்தியால் ஒங்கி அடித்து வில்லத்தனத்தில் மிரட்டும் பஞ்சவர்ணம். எதிர்பாராத குணாதியத்தில் வில்லத்தனம் நிறைந்த கதபாத்திரத்தில் வசுதா கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அசத்தி விடுகிறார்.

முதியவராக ராம்ஜி முதலில் சாதாரண மனிதராக தோன்றுவதும், பின்னர் விஞ்ஞானியாக அவர் செய்யும் காரியங்கள் அதிர்ச்சி ஏற்படுத்த, படுத்த படுக்கையாக இருந்தாலும் தன் முகபாவத்தால் வெறுப்பையும், இயலாமையும் சரியாக வெளிப்படுத்தி க்ளைமேக்சில் முக்கிய திருப்புமுனையாக படத்தில் இருக்கிறார்.

சாம்ஸ் சீரியஸான ரோலில் கொஞ்சம் ஒன் லைன் பஞ்ச் வசனங்களை நிரப்பி தன்னால் முடிந்த வரை காமெடியை தவிர்த்து தன் கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார்.பாலாஜி வெங்கட்ராமன், கோவை குருமூர்த்தி ஆகியோர் பக்கமேளங்கள்.

இயக்குனர் வினோவின் பாடல்களை சிபு சுகுமாரன் தன் இசையால் நிறைவு செய்து, பின்னணி இசையை கேட்கும்படி கொடுத்திருக்கிறார்.

ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை தன் காட்சிக் கோணங்களால் சுவாரஸ்யமாக கொடுத்து தோய்வு ஏற்படாதவாறு செய்திருப்பதிலேயே படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.

படத்தொகுப்பு : தினேஷ் காந்தி கச்சிதமாக செய்துள்ளார்.

ஏற்கனவே தமிழில் ரெண்டகம், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் படமும் இதே சாயலில் முதலில் இரண்டாம் பாகம் வெளிவந்து முதல் மற்றும் மூன்றாம் பாகம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. அதே போல் இந்தப் படமும் இதே சாயலில் தான் உருவாகி புரொஜக்ட் சி – சாப்டர் 2 வெளிவந்துள்ளது. இதைத்தான் சோபோமோர் படம் என்று சொல்வார்கள். இதன் கதைக்களம் எப்படி வேண்டுமானாலும் அடுத்த கதைக்குள் இணைக்கும் அளவிற்கு திரைக்கதை வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம், மூன்றாம் பாகத்தை அதி விரைவில் காணலாம். முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு சிலர் தவிர நடித்த அனைவரும் புதுமுகங்கள், புதுமையான கதைக்களம், வித்தியாசமான முயற்சி, அதிரடியான திருப்பங்கள், அசத்தலான வில்லத்தனம் அனைத்தும் கலந்து இறுதிக் காட்சி சஸ்பென்சுடன் முடித்து புதிய அனுபவத்தையும், அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாக காட்சிப்படுத்தி இயக்கியுள்ளார் வினோ. பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் புரொஜக்ட் சி – சாப்டர் 2 (Project C – Chapter 2) பணவேட்டையில் குறி வைத்து தடுமாறும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் சதுரங்க ஆட்டம்.