என்ஜாய் விமர்சனம் : என்ஜாய் இளமை துள்ளல் நிறைந்த பயணத்தில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை உணர்த்தும் படம் | ரேட்டிங்: 3/5

0
339

என்ஜாய் விமர்சனம் : என்ஜாய் இளமை துள்ளல் நிறைந்த பயணத்தில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை உணர்த்தும் படம் | ரேட்டிங்: 3/5

எல்.என்.எச் கிரியேசன் சார்பில் ம.லட்சுமி நாராயணன் தயாரித்திருக்கும் என்ஜாய் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பெருமாள் காசி.
இதில் மதன் குமார், விக்னேஷ் (நடனக் கலைஞர் விக்கி) , ஹரிஷ் குமார், நிரஞ்சனா நெய்தியார், சாய் தன்யா, ஜி.வி அபர்ணா, ஷருமிஷா, ஹாசின், பில்லிமுரளி, காலாட்படை ஜெய், யோகிராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர் – கே.என்.அக்பர், இசை – கே.எம்.ரயான், பின்னணி இசை – சபேஷ்-முரளி, எடிட்டர் – மணி குமரன், பாடல்கள் – விவேகா, உமாதேவி, நடனம்- தினேஷ், சண்டை- டேஞ்சர்மணி, கலை- சரவண அபிராமன், மக்கள் தொடர்பு – குணா

சென்னையில் வசிக்கும் மூன்று நண்பர்கள், மூன்று குணாதிசயங்கள் ஆனால் பெண்கள் விஷயத்தில் மட்டும் சபலத்தோடு ஒரே எண்ணத்தில் பயணிக்கின்றனர். முதலாவதாக மதன்குமார் ஐஏஎஸ் தேர்விற்காக மும்முரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு மறுபுறம் சாய் தன்யாவை காதலிக்கிறார். காதலி தன்னை தொட விடாமல் சதா படிப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க சீரீயஸ் காதலை நினைத்து மதன்குமார் விரக்தியின் இருக்கிறார். இரண்டாவதாக ஐடி கம்பெனியில் பணிபுரியும் விக்னேஷ், ஆடம்பர வாழ்க்கை, நினைத்த பெண்களுடன் டேட்டிங் என்று ஜாலியாக ஊர் சுற்றுபவர். மூன்றாவதாக ஹரீஷ்குமார் பணக்கார பையன் என்றாலும்,; அந்தரங்க பிரச்சினையால் கொஞ்சம் தயக்கம் கூச்சம் உள்ளவர். இவர்கள் மூவரும் சேர்ந்து கொடைக்கானலில் உல்லாசமாக இருக்க முடிவு செய்து இன்பச்சுற்றுலா செல்கின்றனர்.

அதே சமயம் முதலாம் ஆண்டு சென்னை கல்லூரியில் சேரும் ஜீவி அபர்ணா, ஷருமிஷா நடுத்தர இரண்டு கிராமத்து பெண்கள் மற்றும் நிரஞ்சனா பெங்க@ரை சேர்ந்த ஒரு பெண் ஆக மூன்று பெண்களும் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர்.இவர்களின் வசதியையும், தோற்றத்தையும் உருவ கேலி செய்து ராக்கிங் செய்யும் சீனியர்களிடமிருந்து காப்பாற்றுகிறார் ஹாசின் என்ற சீனியர் மாணவி. அன்று முதல் மூன்று பெண்க@ம் ஹாசினிடம் நட்பாக பழக, அவர்களுக்காக ஆடம்பரமாக செலவு செய்கிறார் ஹாசின். பணக்கார பெண் ஹாசின் என்று நினைக்கும் மூன்று தோழிகளும் அவளின் ஊருக்கு செல்லும் போது தான் நடுத்தர குடும்பத்து பெண் ஹாசின் என்பதை அறிந்து அதிர்ச்சியாகின்றனர். விடுதிக்கு வந்து ஹாசினிடம் விசாரிக்க, வீக் எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு பெரும் பணம் சம்பாதிப்பதாக சொல்கிறார். இவர்களுக்கும் தங்கள் செலவுகளுக்காக வீக் எண்ட. பார்ட்டிகளில் கலந்து கொள்ள முடிவு செய்து ஹாசினிடம் சொல்கின்றனர். ஹாசின் முதலில் சம்மதிக்கவில்லை என்றாலும் பின்னர் வற்புறுத்தலின் பேரில் மூன்று பேரையும் கொடைக்கானல் வீக் எண்ட் பார்ட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். இந்த மூன்று பெண்களும் கொடைக்கானல் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, அங்கு அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட வழி தெரியாமல் ஏதாவது விடுதியில் தங்க முடிவெடுக்கின்றனர்.

இதனிடையே மூன்று நண்பர்களும் கொடைக்கானல் வந்து  ஜாலியாக இருக்க ஏற்பாடு செய்த நண்பரால் ஏமாற்றப்பட்டு விடுதியில் தங்க வருகின்றனர். மூன்று நண்பர்களும், மூன்று தோழிகளும் விடுதி அறையில் ஒன்றாக தங்க நேரும் சூழல் ஏற்படுகிறது. மறுநாள் அவர்கள் அனைவருமே பிரிந்து செல்ல, மீண்டும் எங்கு சந்தித்தார்கள்? பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை நண்பர்கள் எப்படி சமாளித்து காப்பாற்றினார்கள்? இவர்கள் அனைவருமே ஒன்றாக இணைந்தார்களா? வீன் எண்ட் பார்ட்டி ஒனரால் ஏற்பட்ட சிக்கல் என்ன? அவரிடமிருந்து தப்பித்தார்களா? அதன்பின் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

மதன் குமார், விக்னேஷ் (நடனக் கலைஞர் விக்கி) , ஹரிஷ் குமார் ஆகிய மூவரும் நண்பர்களாக தங்களின் மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக செய்துள்ளனர். இவர்கள் பேசும் வசனங்கள் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற் போல் இரட்டை அர்த்தத்துடன் படம் நெடுக அள்ளித் தெளித்துள்ளனர். சில காட்சிகள் வலிய திணித்தது போல் இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தனித்து தெரிகின்றனர்.

ஜீவி அபர்ணா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகிய மூவரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழி தவறி செல்ல முடிவெடுக்கும் சூழலிலும், செய்வது தவறு என்பதை உணர்ந்து பின் வாங்குவதிலும், தங்களை காப்பாற்றி கொள்ள போராடும் போது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழும் தோழியாக ஹாசின்தான் செய்வது சரி என்று நியாயப்படுத்தி பின்னர் தன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று அறிவுரை கூறி, எச்சரிக்கும் விஷத்திலும் இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார்.

காதலியாக வரும் சாய் தன்யா பெண்கள் எப்படி உஷாராக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

மற்றும் பில்லிமுரளி, காலாட்படை ஜெய், யோகிராம் ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக வந்து போகின்றனர்.

ஒளிப்பதிவாளர் – கே.என்.அக்பர், இசை – கே.எம்.ரயான், பின்னணி இசை – சபேஷ்-முரளி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலம்.

எடிட்டர் – மணி குமரன் நிறைவாக செய்துள்ளார்.

இளமையில் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் அதற்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய பல வழிகள் இருக்க, எதை தேர்ந்தெடுக்கிறார்கள், எதை இழக்கிறார்கள் என்பதை இளைஞர்களின் வாழ்க்கை மையப்படுத்தி எப்படி வாழ்க்கையை வாழக்கூடாது என்பதை உணர்த்தி கொஞ்சம் கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்களால் நிரப்பி இளசுகளை என்ஜாய் செய்ய வைத்து இறுதியில் அறிவுரையோடு முடித்துள்ளார் இயக்குனர் பெருமாள் காசி. முதல் பாதி ஜாலியாக செல்ல, இரண்டாம் பாதி காதல், ஆக்ஷன் என்று பயணிக்கிறது.

மொத்தத்தில் எல்.என்.எச் கிரியேசன் சார்பில் ம.லட்சுமி நாராயணன் தயாரித்திருக்கும் என்ஜாய் இளமை துள்ளல் நிறைந்த பயணத்தில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை உணர்த்தும் படம்.