பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை ‘ஹெலினா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

0
94

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை ‘ஹெலினா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

PIB Chennai:

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை ‘ஹெலினா’, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்து ஏப்ரல் 11, 2022 அன்று செலுத்தப்பட்டு, மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. பயனாளர் சரிபார்ப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டதுடன், அந்த ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை உலகிலேயே மிக நவீனமான பீரங்கி எதிர்ப்பு சாதனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.