விடியல் நாயகனின் வெற்றி தளபதி – பூச்சி எஸ்.முருகன்

0
252

விடியல் நாயகனின் வெற்றி தளபதி – பூச்சி எஸ்.முருகன்

ஒரு பாட்டி வீட்டுக்கு செல்கிறார் உதயநிதி. அந்த பாட்டி ஒரு தோசையாவது சாப்பிட்டு போ கண்ணு என்று வாஞ்சையோடு கேட்கிறார். சற்றும் தாமதிக்காமல் உங்க கையாலயே கொடுங்க… என்று பாட்டி கைகளாலேயே ஊட்டிக் கொள்கிறார். அந்த பாட்டியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் குளமாகிறது. இது தேர்தலுக்கு வாக்கு கேட்க சென்றபோது கண்ட காட்சி அல்ல. மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மக்களின் குறைகளை கேட்க சந்தித்தபோது நடந்த சம்பவம்.

அண்ணாவிடம் கண்ட ஆளுமையும் கொள்கை பிடிப்பும், முத்தமிழறிஞரிடம் நிறைந்த ஆற்றலும் சமயோசித திறனும், தளபதியின் நிர்வாகமும் கடின உழைப்பும் என உதயநிதி திராவிட தளபதியாகி விட்டார். அவர் எந்த பகுதிக்குள் நுழைந்தாலும் அந்த பகுதி குழந்தைகள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் உற்சாகமும். அடுத்த தலைமுறைக்கான இளைய விடியல் அவர்.

எம்.எல்.ஏ.வாக தொகுதிக்குள் நுழைவதில்லை. பொறுப்பான மக்கள் சேவகனாய் நுழையும் அவரை பெரியோர்கள் எல்லாம் தம்பி, மகளிரெல்லாம் அண்ணா, குழந்தைகள் எல்லாம் மாமா என மக்கள் தலைவனாகவே அவரை பார்க்கிறார்கள்.
விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் ஒரு முன்னுதாரண சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தி உயர்ந்து நிற்கிறார்…

உதயநிதி என்பவர் தனி மனிதர் அல்ல மக்களின் தேவை, எதிர்கால இளைஞர்களின் நம்பிக்கை. விடியல் நாயகனின் வெற்றி தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…