ரூ.2000 விமர்சனம் – சமூக அக்கறை கொண்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த விழிப்புணர்வு படம்

0
209

ரூ.2000 விமர்சனம் – சமூக அக்கறை கொண்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த விழிப்புணர்வு படம்

கோ. பச்சியப்பன் தயாரிப்பில் ரூ.2000 திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ருத்ரன். இதில் பாரதி கிருஷ்ணகுமார் -பாலன்,ருத்ரன் பராசு -விக்னேஷ்,அய்யநாதன் -அப்புசாமி, ஷர்னிகா-அஜீதா, கராத்தே வெங்கடேஷ்-ராமதாஸ்,தோழர் ஓவியா, தோழர் தியாகு ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை : இனியவன், எடிட்டிங்:லட்சுமணன், ஒளிப்பதிவு :பிரிமூஸ் தாஸ், பிஆர்ஒ- பெருதுளிசிபழனிவேல்.

விவசாயியான அய்யநாதன் நீண்ட வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறக்கிறது, அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக மருந்து தேவைப்பட பணம் எடுக்க ஏடிஎம் செல்கிறார்.அங்கே 2000 நோட்டு எடுக்க அதில் யாரோ எழுதி வைத்துள்ளனர். அதை எடுத்துக்கொண்டு மருந்துக்கடைக்கு செல்ல, அந்த நோட்டு செல்லாது என்று திருப்பிஅனுப்பபடுகிறார். மருந்து கிடைக்காத தாமதத்தால் குழந்தை இறக்கிறது. அதற்கு காரணமான ஏடிஎம் நிர்வகிக்கும் தனியார் நிறுவனம், வங்கி, மருந்துக்கடைக்காரர், ரிசர்வ் வங்கி நிர்வாகி என்று அனைவர் மீதும் வழக்குரைஞர் பாரதி கிருஷ்ணகுமார் மூலம் வழக்கு தொடுக்கிறார். இன்னொருபுறம் வழக்குரைஞரின் உதவியாளர் ருத்ரன் உயர் வகுப்பு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள, இதனால் பெண்ணின் பெற்றோர் ருத்ரனை படுகொலைசெய்ய திட்டமிட எதிர்பாராதவிதமாக  ருத்ரனின் மனைவி இறந்துவிடுகிறார். சாதி ஆணவக் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய ருத்ரன் வழக்கை தொடுக்கிறார். இந்த இரண்டு வழக்குகளின் முடிவு என்னானது? நீதி கிடைத்தாதா? என்பதே கதை.

பாரதி கிருஷ்ணகுமார் -பாலன்(வழக்குரைஞர்), ருத்ரன் பராசு -விக்னேஷ் (வழக்குரைஞர்), அய்யநாதன் -அப்புசாமி (விவசாயி), ஷர்னிகா-அஜீதா (வழக்குரைஞர்), கராத்தே வெங்கடேஷ்-ராமதாஸ்(வழக்குரைஞர்), தோழர் ஓவியா-நீதிபதி, தோழர் தியாகு-நீதிபதி ஆகியோர் திறம்பட கதாபாத்திரங்களின் வாயிலாக அனல் பறக்கும் வசனங்களில் அசத்திவிடுகின்றனர்.

இனியவனின் இசையும், பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவும் நீதிமன்ங காட்சிகளுக்கு தகுந்தவாறு பங்களிப்பை கொடுத்திருப்பது கவனிக்க வைக்கிறது.

லட்சுமணன் படத்தொகுப்பு வசனங்களின் அவசியத்திற்கேற்ப அழகாக கொடுத்துள்ளார்.

காட்சிகளில் விவரிக்காமல், வசனங்களாலேயே கடந்து போகும் சம்பவங்கள். ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் மையங்களில் நிரப்புவது முதல் அவை பாமர மக்களின் கைகளில் கிடைக்கும் வரை நடக்கும் நடைமுறைகளை தெளிவான உணர்த்தி அதனுடன் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் இரு வேறு கோணங்களில் நீதி மன்ற காட்சிகளோடு படம் முழுவதும் அச்சு பிசறாத தமிழ் வாhத்தைகளையும், வாதங்களையும் சிறப்பாக கையாண்டிப்பிதிலேயே கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ருத்ரன்.

மொத்தத்தில் ரூ.2000 நல்ல வோட்டுக்களை வெல்லும், சமூக அக்கறை கொண்ட சட்ட நுணுக்கங்கள் நிறைந்த விழிப்புணர்வு படம்.