தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் பதில்

0
137

தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் பதில்

தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்’ என்று பேசி இருந்தார்.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பின் சார்பில் தென்னிந்திய ஊடகம் பொழுதுபோக்கு கருத்தரங்கில் பங்கேற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் இந்தியாவிற்கு இந்தி தான் இணைப்பு மொழி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, தமிழ்தான் இணைப்பு மொழி என்று பதிலளித்தார்.