தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் அனைவரும் பார்க்க வேண்டிய குடும்பத்தை வலுவாக்கும் சமையலறை பாடம் | ரேட்டிங்: 3/5

0
360

தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் அனைவரும் பார்க்க வேண்டிய குடும்பத்தை வலுவாக்கும் சமையலறை பாடம் | ரேட்டிங்: 3/5

ஆர்டிசி மீடியா லிமிடெட் சார்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார் ஆர்.கண்ணன்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், போஸ்டர் நந்தகுமார்,கலைராணி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை மற்றும் பிஜிஎம் : ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட்,ஓளிப்பதிவு : பாலசுப்ரமணியம், பாடல்கள் : கபிலன் வைரமுத்து, டாக்டர். கிருத்தியா,எடிட்டிங் : லியோ ஜான் பால், கலை ராஜ்குமார், வசனம்-ஜீவிதா சுரேஷ்குமார், சவரி, நடனம்-காயத்ரி ரகுராம், சதீஷ் கிருஷ்ணன், உடை-பிரதீபா, தயாரிப்பு நிர்வாகி-ஒம்சரண், மக்கள் தொடர்பு : ஜான்சன்

நடனத்தில் ஈடுபாடு கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சமூகவியல் ஆசிரியர் ராகுல் ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கிறது. மாமனார் வீட்டில் அன்றாட வேலைகளை மாமியார் செய்து கொண்டிருக்க அவருக்கு  ஐஸ்வர்யா ராஜேஷ் உதவுகிறார். சமையல் செய்வது, காய்கறி நறுக்குவது, அம்மிக்கல்லில் அரைப்பது, சாதத்தை விறகு அடுப்பில் சமைப்பது, பாத்திரங்களை கழுவுவது, வீட்டை பெறுக்கி சுத்தப்படுத்தவது, கணவன் மற்றும் மாமனாருக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது என்று தினமும் வேலையை கற்றுக் கொண்டு செய்கிறார். மகளின் பிரசவத்திற்காக மாமியார் ஊருக்கு சென்று விட அதன் பின் அத்தனை வேலைகளையும் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஆண்கள் இருவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை கேட்டும், சொல்கிறபடி சமைக்க வேண்டும் என்று கட்டளையிடுவதும், மாமனாரின் துணிகளை கையில் துவைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதும் என்று  ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பாத்;திரம் கழுவும் சிங் ஒழுக ஆரம்பிக்க, அதை சரி  செய்ய முயற்சி எடுக்காமல் கணவர் இருப்பதை கண்டு எரிச்சலடைகிறார். ஒரு கட்டத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்pற்கு சலிப்பு உண்டாகி நடன ஆசிரியராக வேலைக்கு செல்ல விண்ணப்பிக்கிறார். இதனை கேள்விப்படு;ம் கணவன் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இறுதியில்  ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன முடிவு செய்தார்? வேலையில் சேர்ந்தாரா? கணவனுக்கு பாடம் புகட்டினாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் படம் முழுவதும் கதையின் நாயகியாக சமையலறையில் ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் செய்த வேலையை சலைக்காமல் செய்து கொண்டிருப்பதை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்து மீண்டும் மீண்டும் காட்டினாலும் சலிப்பு ஏற்படாத வண்ணம் திறம்பட செய்துள்ளார். இவை அனைத்தும் அன்றாடம் வீட்டில் நடப்பவை தான் என்பதை இவரின் செயலில் மூலம் அனைவருக்கும் அழுத்தமாக புரிய வைத்துள்ளார். மாதவிடாய் காலத்தில்  பெண்களை நடத்தும் விதம், தனக்கு விரும்பியதை செய்ய முடியாத நிலை, தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நிலை, பிறந்த வீட்டின்; அறிவுரையால் சலிப்பு ஏற்படுவது,  வீட்டில் சிறு உதவி கூட செய்ய இயலாத ஆண்களைக் கண்டு பொங்குவது, பழுதடைந்தால் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையை மட்டும் கவனம் செலுத்துவதை கண்டு ஆத்திரப்படுவது, அதன் பின் எடுக்கும் தீர்க்கமான முடிவு என்று அச்சு அசலாக பிரதிபலித்துள்ளார்.

கணவனாக ராகுல் ரவீந்திரன் சுயநலமிக்க, குடும்ப தலைவர் என்ற ஆணவப் பேச்சு, அடக்கி அதட்டி வேலை வாங்க நினைக்கும் குணம், தன் சொல்லை தட்டாமல் நடக்க வேண்டும் என்ற வறட்டு பிடிவாதம்  கொண்ட மனிதராக படத்தில் வலம் வருகிறார்.
போஸ்டர் நந்தகுமார், கலைராணி, பால் விற்கும் சின்ன பெண், சிறப்பு தோற்றத்தில் யோகி பாபு அனைவருமே கச்சிதமாக செய்துள்ளனர்.

சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசை மற்றும் பிஜிஎம் படத்தின் முக்கிய பங்களிப்பாக சின்ன சின்ன ஒலிகளைக் கூட நுணுக்கமாக கொடுத்து படத்தின் முக்கிய காட்சிகளுக்கு உத்திரவாதமாக திகழ்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு காட்சிகளை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது.

எடிட்டிங் : லியோ ஜான் பால், கலை ராஜ்குமார், வசனம்-ஜீவிதா சுரேஷ்குமார், சவரி, நடனம்-காயத்ரி ரகுராம், சதீஷ் கிருஷ்ணன், உடை-பிரதீபா தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது.

ஆணாதிக்கம் மற்றும் ஒரு சில ஆண்கள் தங்கள் வீட்டில் உள்ள பெண்களை எப்படி நடத்துகிறார்கள், குறிப்பாக கடினமான காலங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி படம் சில பொருத்தமான பதிவுகளை செய்கிறது. மலையாளத்தில் நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்து கடந்த 2021-ல் ஒடிடியில் வெளியாகிய தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன். இந்தத் தமிழ்ப் பதிப்பு, அசலைப் போலவே, இதுவும் அசாதாரணமான உணர்ச்சிகளை வெளிக்கொணர சாதாரண விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. முன்னணி நடிகர்களின் சிறப்பான நடிப்பைக் கொண்ட ஒரு தகுதியான ரீமேக் ஆகும். ஒரு இல்லத்தரசியின் அன்றாட வழக்கத்தைக் காண்பிப்பதில் இருந்து அவளது உரிமைகளைத் தடுப்பது வரை, இந்தப் படம் சமூகத்தின் சரியான பிரதிபலிப்பாகும். இது ஆணாதிக்க படமாக கருதக்கூடாது, அவர்களுக்கு துணை போகும் பெண்களின் படமாகவும் பார்க்கலாம். இதை பார்க்கும் பெண்களுக்கு ஒரு புரிதலையும், தன்னம்பிக்கை கொடுக்கும் படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அனைத்து பெண்களையும் சிந்திக்க வைக்கும் படமாகவும் அமையலாம். இறுதியில் பெண்கள் தங்கள் விரும்பியதை சுதந்திரமாக செய்ய முடிவு எடுப்பதும், ஆண்கள் தங்கள் மனோபாவாங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதையும் விவரித்துள்ளது.

மொத்தத்தில் ஆர்டிசி மீடியா லிமிடெட் சார்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்திருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் அனைவரும் பார்க்க வேண்டிய குடும்பத்தை வலுவாக்கும் சமையலறை பாடம்.