தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 26ல் தேர்தல்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், மார்ச் 26ல் நடக்க உள்ளது.
சங்க நிர்வாகிகள் அறிக்கை:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 26ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மார்ச் 26ல் நடக்க உள்ளது.
தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடக்கும் இடம் முடிவு செய்த பின் அறிவிக்கப்படும்.
வரும் 23ம் தேதி காலை 11:00 மணி முதல், 26ம் தேதி மாலை 5:00 மணி வரை, வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள், சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். 100 ரூபாய் செலுத்தி மனுவை பெற்றுக் கொள்ளலாம். வரும் 27 முதல் மார்ச் 2 வரை பூர்த்தி செய்யப்பட்ட மனுவை வழங்கலாம்.
மார்ச் 26ம் தேதி காலை 8:00 முதல் மாலை 4:00 வரை தேர்தல் நடக்கும். மணிக்கு மாலை 5:00 ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
தலைவர் பதவிக்கு 1 லட்சம் ரூபாயும், துணைத் தலைவர்கள், செயலர்கள் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.