காமி சினிமா விமர்சனம் : காமி புதுமை நிறைந்த கதைகளைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களை இந்தப் படம் திருப்திப்படுத்தும் | ரேட்டிங்: 3/5

0
350

காமி சினிமா விமர்சனம் : காமி புதுமை நிறைந்த கதைகளைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களை இந்தப் படம் திருப்திப்படுத்தும் | ரேட்டிங்: 3/5

கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ் லிமிடெட், கிளவுன் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை கிரவுட் ஃபண்டிங் மூலம் தயாரித்திருக்கிறார் கார்த்திக் சபரீஷ்.

இதில் விஸ்வக் சென் – சங்கர், சாந்தினி சவுத்ரி – டாக்டர் ஜானவி, அபிநயா – துர்கா., ரிகா பெட்டா – உமா (துர்காவின் மகள்), தயானந்த் ரெட்டி, முகமது சமத், சாந்தி ராவ், மயங்க் பராக், ஸ்ரீதர் அந்தந்த கதாபாத்தரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :இயக்கம் – வித்யாதர் காகிடா, திரைக்கதை – வித்யாதர் காகிடா மற்றும் பிரத்யுஷ் வாத்யம், ஒளிப்பதிவு – விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா, இசை (பாடல்கள்) – ஸ்வீகர் அகஸ்தி, பின்னணி இசை – நரேஷ் குமரன், படத்தொகுப்பு – ராகவேந்திர திருன், மக்கள் தொடர்பு – யுவராஜ்

சங்கர் (விஷ்வக் சென்) ஒரு அகோரி. அவர் உடல் மனித ஸ்பரிசத்தை பொறுத்துக்கொள்ள முடியாத வினோதமான அபூர்வ நோயால் பாதிக்கப்படுகிறார். இதன் விளைவாக, சக அகோராக்கள் அனைவரும் அவரை சபிக்கப்பட்டவர் என்று கருதி ஆசிரமத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதனால் பிரயாக்ராஜில் உள்ள கேதர் பாபாவை சந்தித்து தன்னை அறிய முற்படும் போது இமயமலையின் துரோணகிரி மலைத்தொடர்களில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மாலிபத்ரா இதழ்களில் ஒளிரும் காளானால்  தன் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கிறது என்பதை சுவாமிஜி மூலம் அறிகிறார். அங்கு செல்ல பல இடர்களை கடந்து செல்ல வேண்டும் என்பதால் டாக்டர் ஜாஹ்னவி (சாந்தினி சௌத்ரி)  உதவியுடன் தன் தேடலை தொடங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? இலக்குகளை அடைவதற்கு அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? தேவதாசி துர்காவின் (அபிநயா) மகள் உமா (ஹரிகா) மற்றும் சிடி333 (முகமது) ஆகியோரின் நினைவுகள் ஏன் சங்கரைத் துரத்துகின்றன? அவர்களுக்கும் அவருக்கும் என்ன உறவு? இந்த ‘காமி’ படத்தின் கதை என்ன? மற்ற விஷயங்களை திரையில் பார்க்க வேண்டும்.

அகோரி வேடத்தில் விஸ்வக்கை அறிமுகப்படுத்தி ஆரம்பித்த விதம் சுவாரஸ்யம். சக அகோராக்கள் அனைவரும் அவனைத் தாக்க முயல்வது, அதைத் தொடர்ந்து நடக்கும் மல்யுத்தப் போட்டி, மனித ஸ்பரிசத்தால் அவனது உடலில் ஏற்படும் மாற்றங்கள், இதெல்லாம் சங்கருக்கு அவனது கடந்த காலத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டுவது போன்ற காட்சிகளில் விஷ்வக் உணர்ச்சிகரமான காட்சிகளில் நல்ல நடிப்பு.

சிடி333 வேடத்தில் முகமதுவின் நடிப்பும், தேவதாசி துர்காவாக அபிநயாவின் நடிப்பு மனதை வருடுகிறது. தேவதாசி துர்காவின் அத்தியாயத்தில் தேவதாசி முறை காட்டப்பட்ட விதமும் மகிழ்ச்சி அளிக்கிறது. துர்காவின் மகள் உமாவின் வாழ்வில் ஏற்படும் மோதல்களும் பார்வையாளர்களை வெகுவாகத் தொடுகின்றன. உமாவை கட்டாயப்படுத்தி தேவதாசியாக மாற்ற கிராம சர்பஞ்சின் நடவடிக்கை என்று உமா கதாபாத்திரத்தில் ஹரிகா பார்வையாளர்களைக் கவருகிறார். ஜாஹ்னவி கதாபாத்திரத்திற்காக சாந்தினியின் போராட்டம் திரையில் தெரியும். மயங்க் பராக் கொடூரமான மருத்துவராக திகிலூட்டுகிறார்.

விஸ்வநாத் ரெட்டி மற்றும் செலுமுல்லா தங்களது ஒளிப்பதிவின் மூலம் படத்திற்கு உயிர் கொடுத்தள்ளனர். குறிப்பாக இமயமலை காட்சிகளின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம்.ஸ்வீகர் அகஸ்தி இசையும், நரேஷ் குமரனின் பின்னணி இசை படத்தின் மற்றொரு ஈர்ப்பு. “சிவம்” பாடலின் காட்சி நன்றாக உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் நல்ல கிராபிக்ஸ் வேலைகளை உருவாக்கி காட்டியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது. விஎஃப்எக்ஸ் பெரும்பாலான பார்வையாளர்களை மயக்குகிறது.

ஒன்பது வருடங்கள் படத்துக்காக உழைத்த உழைப்பு வீணாகவில்லை என்பது படத்தைப் பார்த்த பிறகு புரியும். இயக்குநர் கதையை ஆரம்பித்து மூன்று வாழ்க்கைக் கதைகளை இணையாகக் காட்டி சுவாரஸ்யமாக எடுத்துச் சென்று இறுதியில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நேர்கோட்டில் இணைத்திருக்கும் விதம் ஆச்சரியம். குறிப்பாக க்ளைமாக்ஸில் சிங்கம் சீக்வென்ஸ் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் மனிதர்கள் மீதான சட்டவிரோத மருத்துவ பரிசோதனைகளின் பின்னணியில் வரும் கதையும் பரபரப்பாக உள்ளது. சிடி 333 இல் நடந்த சோதனைகளிள் சிக்கிக்கொண்ட உலகம், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. துரோணகிரி மலைத்தொடரை அடைய ஷங்கர் – ஜாஹ்னவியின் சாகசப் பயணம் சுவாரசியமாகவும் இடையிடையே வரும் காட்சிகள் இரண்டாம் பாதியின் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. காமி கதையை இயக்குநர் வடிவமைத்து திரைக்குக் கொண்டு வந்த விதம் நன்று. ஒரு சுவாரசியமான திரைக்கதையுடன், பார்வையாளர்களை படம் முழுவதையும் வழிநடத்துகிறார். சொல்லப்போனால், படம் பார்க்கும் போது, இது ஒரு ஆந்தாலஜி திரைக்கதையாகத் தோன்றினாலும், க்ளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நல்ல முயற்சியை திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் படத்தை பார்த்து அசந்து போவார்கள். கதை போலத் தோன்றும் இப்படத்தை இயக்குநர் தனக்கே உரிய திரைக்கதையால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ் லிமிடெட், கிளவுன் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திக் சபரீஷ்  தயாரித்திருக்கும் காமி ‘புதுமை நிறைந்த கதைகளைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களை இந்தப் படம் திருப்திப்படுத்தும்’.