அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்

0
43
அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜன்ஸி நட்சத்திர விடுதியில் சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும்  ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ராகுல் ஷிவசங்கர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே,  சன்மார் குழுமம், டிடிகே, சீப்ராஸ், பி.எம்.டபிள்யு, ஜினேஷ்வர் கேபிடல் மற்றும் ரெடியன்ட் குழுமம் உள்ளிட்ட சென்னையைச் சேர்ந்த முக்கிய மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்சரா ரெட்டியால் தொடங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சி, குழந்தை உரிமைகளுக்கான பிரச்சாரம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த விருது நிகழ்ச்சியை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜெகநாதன், மில்கி மிஸ்ட் மேலாண் இயக்குநர், ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் ஆண்டாள் கல்பாத்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த பிரமாண்ட விருது விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.   மனநலப் பிரச்சினைகள், ஆட்டிசம் மற்றும் டிஸ்லெக்ஸியா பாதிப்புக்குள்ளான சிறப்பு குழந்தைகளுக்கான சேவைக்காக டோரை அறக்கட்டளையின் சுமித்ரா பிரசாத்திற்கு விருது வழங்கி சிறப்புக்கபட்டது.
மேலும் அடித்தள களப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிலாஜா, எம்.கே. பி. நகரை சேர்ந்த ஹீனா, கண்ணகி நகரை சேர்ந்த திவ்யா பரமேஸ்வரி, மற்றும் துரைப்பாகத்தை சேர்ந்த சிவகாமி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே “டிஜிட்டல் யுகத்தில் சமூகப் பொறுப்பு” பற்றி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
 நடிகை ராதிகா சரத்குமார் பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உடல்மொழியில் கவனம் செலுத்துவதைப் பற்றி உணர்ச்சிப் பூர்வமாக பேசினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அப்சரா ரெட்டி, “குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களை  கவனத்தில் கொண்டு,  தென்னிந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க பணிகள் நடக்கின்றன என்றார்.  ஆனால் அடிமட்ட கள செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
 சிறுவர் மீதான வன்முறைக்கு எதிராக அற்புதமான வேலைகளைச் செய்து வரும்,  ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை கௌரவிக்க இந்த தளத்தை உருவாக்கியுள்ளோம் என்றும், குழ்ந்தைகளுக்காக தொடர்ந்து பேசுவதன் மூலம் பெற்றோரின் விழிப்புணர்வை அதிகரிப்பது தங்கள் நோக்கம் என்றும் கூறினார்.