டெவில் சினிமா விமர்சனம் : டெவில் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் திகில் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
330

டெவில் சினிமா விமர்சனம் : டெவில் திருமண பந்தத்தில் நடக்கும் த்ரில்லிங் நிறைந்த காதல் சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 3/5

மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி தயாரித்திருக்கும் டெவில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதித்யா

அலெக்ஸாக விதார்த், ரோஷனாக திரிகன், ஹேமாவாக பூர்ணா,சோபியாவாக சுபஸ்ரீ, சிறப்பு தோற்றத்தில் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இணை தயாரிப்பாளர் – பி.ஞானசேகர், இசை – மிஸ்கின், ஒளிப்பதிவாளர் – கார்த்திக் முத்துக்குமார், எடிட்டர் – இளையராஜா.எஸ், கலை இயக்குனர் – ஆண்டனி மரியா கெர்லி, பாடல் வரிகள் – மிஷ்கின், ஒலி கலவை – தபஸ் நாயக், ஒலி வடிவமைப்பு – எஸ்.அழகிய கூத்தன், இணை இயக்குனர் – ஆர்.பாலச்சந்தர், வண்ணக்கலைஞர் – ராஜராஜன் கோபால், ஸ்டண்ட் – ராம்குமார், ஆடை வடிவமைப்பு – ஷைமா அஸ்லம், ஸ்டில்ஸ் – அபிஷேக் ராஜ், விளம்பர வடிவமைப்பு – கனதாசன் டி.கே.டி, தயாரிப்பு நிர்வாகி – எஸ்.வெங்கடேசன், லைன் புரொடியூசர் – எல்வி ஸ்ரீPகாந்த்லக்ஷ்மன், மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்

காரில் வரும் ஹேமா(பூர்ணா) பைக்கில் வரும் ரோஷன் (திரிகன்) இருவரும் ஒரு விபத்தில் சந்தித்து கொள்கின்றனர். தன் காரில் அடிபடும் ரோஷனை காப்பாற்றி ஹேமா உதவிகள் செய்கிறார். இருவருள்ளும் நாளடைவில் உதவி நட்பாக மாறுகிறது. நட்பு காதலாக மலரும் வேளையில் பூர்ணா வீட்டிற்கு வருகிறார். அங்கே தன் கணவர் அலெக்ஸை பார்த்து மௌனமாக செல்கிறார். இதற்கு காரணம் ஒரு வருடங்களுக்கு முன் ஹேமா அலெக்ஸின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாக விரிவடைகிறது. ஹேமா(பூர்ணா) பிரபல வக்கீலாக இருக்கும் அலெக்ஸை (விதார்த்) திருமணம் செய்து கொண்டு பல எதிர்பார்ப்புகளுடன் வரும் வேளையில் கணவனின் அரவணைப்பு கிடைக்காமல் தவிக்கிறார். விலகி போகும் கணவனின் செயல் ஹேமாவிற்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையே ஒரு நாள் ஹேமா அலெக்ஸின் அலுவலகத்திற்கு வர அங்கே வேலை செய்யும்; பிஏ சோபியாவுடன் (சுபஸ்ரீ) கணவர் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியாகி வெளியேறுகிறார்.  சோபியாவின்; அழகிலும் வசீகரித்திலும் மயங்கியிருக்கும் கணவனை திருத்த முடியாமல் ஹேமா விலகியே ஒரே வீட்டில் ஒரு வருடமாக வாழ்கிறார். இந்த சமயத்தில்; தான் ரோஷனின் நட்பு ஆறுதலாக ஹேமாவிற்கு கிடைக்கும் சமயத்தில் தான் கணவன் அலெக்ஸ் திருந்தி சோபியாவை விட்டு விலகி மன்னிப்பு கேட்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஹேமா என்ன முடிவு செய்தார்? கணவனை மன்னித்தாரா? ரோஷனை விட்டு பிரிந்தாரா? ரோஷன் செய்த செயல் என்ன? இறுதியில் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஹேமா என்ன ஆனார்? என்பதே டேவிலின் கதைக்களம்.

அலெக்ஸாக விதார்த் தவறு செய்யும் கணவராக முற்றிலும் மாறுபட்ட பெண் மோகம் கொண்ட கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார். திருமணம் செய்து கொண்டு காதலிக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு மனைவியை உதாசீனப்படுத்தி,காதலியுடன் உல்லாச சல்லாபங்களை செய்வதும், பின்னர் தன் தவறை உணர்ந்து சாஷ்டாங்கமாக மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தருணத்திலும், மனைவி மேல் சந்தேகப்பட்டு எடுக்கும் விவரீதமாக முடிவால் நடக்கும் சண்டை என்று படத்திற்கு தன் நடிப்பால் வலு சேர்த்துள்ளார்.

ஹேமாவாக பூர்ணா ஒரு மனைவியின் எதிர்பார்ப்பும், அக்கறையையும் கணவனிடம் காட்டும் அன்பும் துளியும் பிசகாமல் அமைதியான பெண்ணாக தன் கண்களிலும் நடவடிக்கைகளிலும் தீர்க்கமாக செயல்படும் தருணங்கள், கணவனின் நடந்தையால் விரக்தியடையும் தருணத்தில் கிடைக்கும் நட்பு கொஞ்சம் மனதளவில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு விலகி செல்லும் அற்புதமான கதாபாத்திரம். நல்ல மனைவியாக எடுக்கும் முடிவு அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அதன் பின் பூர்ணா அனுபவிக்கும் துன்பங்கள் என்று படம் முழுவதிலும் தன் தேர்ந்த நடிப்பால் ஆக்ரமித்துள்ளார். ஒவ்வொரு காட்சி;யிலும் இயல்பாகவும், வசனம் இல்லாமல் செய்கையாலும், கண்களால் புரிய வைக்கும் தருணங்களில் தனித்து நிற்கிறார். அழகு தேவதையாக பூர்ணாவின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு முதுகெலும்பு.

ரோஷனாக திரிகன் ஆரம்ப காட்சியில் பூர்ணாவிடம் காட்டும் கோபம், பின் மனம் மாறி நட்புடன் பழகும் வேளையில், பாடல் காட்சிகளிலும் சிறப்பாக செய்துள்ளார். அதன் பின் பூர்ணாவின் வாழ்க்கையில் குறிக்கிடும் வேளையில் வில்லனாக மனதளவில் பாதிக்கப்பட்டவராக விபரீத நடத்தை படத்தின் ஒட்டத்தை மாற்றி விடுவதை சரியாக செய்திருக்கிறார்.

சோபியாவாக சுபஸ்ரீ பணம் மாறும் காதலியாக சுகத்திற்காக குணம் மாறும் கவர்ச்சி குவியலாக திமிருடன் அழகுடன் வந்து போகிறார்.

சிறப்பு தோற்றத்தில் மிஷ்கின் பிச்சைக்காரராக ரோட்டில் திரிந்து கொண்டு ஒரு சில காட்சிகளில் வந்து, பின்னர் பூர்ணாவிற்கு கடவுளாக தெரியும் வகையில் நல்ல அறிவுரையை வழங்கி படத்திற்கு திருப்புமுனை கொடுக்க உதவி செய்கிறார். இப்பொழுது வரும் படங்களில் (உதாரணம் சிங்கப்ப+ர் சலூன் படத்தில் வரும் அரவிந்த்சாமி) ஒரிரு காட்சிகளில் வரும் கடவுள் நல்வழி காட்டி விட்டு மறைவது தான் டிரெண்டிங்.

தொழில்நுட்ப ரீதியாக கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. முதல் பாதி அழகிய நட்பையும் கூடா காதலையும் இரண்டாம் பாதியில் தடம் மாறும் கதைக்கேற்ப இரவுக் காட்சிகளிலும், கார் காட்சிகளிலும் விதார்த் சடலம் திடுக்கிட வைத்து பதற வைக்கும் காட்சிக் கோணங்களில் தத்ரூபமாக தந்துள்ளார்.

பாடல்களை எழுதி இசையமைத்திருக்கும் மிஷ்கின் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிக சீடர் என்பதையும் இந்த படத்தின் மூலம் ஒரு விதிவிலக்கான இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் இருக்க முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார். இசையை கற்று ஒரு படத்திற்கு இசையமைப்பாளராக மாறிய மிஷ்கின், படத்தின் பாடல்கள் மென்மையாக இருந்தாலும், பின்னணி இசை படத்தின் த்ரில்லிங் காட்சிகளுக்கு ஏற்றதாக அதிரடியாக கொடுத்துள்ளார்.

கலை இயக்குனர் ஆண்டனி மரியா கெர்லி மாடர்ன் வடிவமைப்பு கொண்ட வீட்டை அழகியலோடு செய்துள்ளார்.

எடிட்டர் இளையராஜா.எஸ் காட்சிகளை கச்சிதமாக செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் கூடுதல் காட்சியை வெட்டி குழப்பமில்லாமல் கொடுத்திருக்கலாம்.

நால்வரை சுற்றி நடக்கும் கதைக்களம் கணவன் மனைவியிடையே ஏற்படும் பிரிவினையை சாதகமாக பயன்படுத்த முயலும் ஒருவனின் பிடியிலிருந்து தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளும் அமைதியான பெண்ணின் துணிச்சலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா. ஆண்களின் நடத்தையை சகித்துக் கொள்ளும் பெண் ஆனால் தவறே செய்யாத பெண்ணின் மீது தீர விசாரிக்காமல் உடனே காட்டும் ஆக்ரோஷம் நியாயமற்றது. தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் இருவரின் சண்டையில் திடீரென்று டெவிலாக மாறும் ஆண்களிடம் அவளை காப்பாற்ற யாரும் இல்லாத நேரத்தில் சரியான முடிவை தெளிவாக எடுக்க வைத்து காப்பாற்ற வைத்துள்ள இயக்குனர் அதை சுற்றி வளைக்காமல் பயமுறுத்தாமல், குழப்பாமல் தேவையில்லாத காட்சிகளை காட்டாமல் இறுதிக் காட்சியை முடித்திருக்கலாம்.

மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி தயாரித்திருக்கும் டெவில் திருமண பந்தத்தில் நடக்கும் த்ரில்லிங் நிறைந்த காதல் சதுரங்க ஆட்டம்.