மறக்குமா நெஞ்சம் விமர்சனம் : மறக்குமா நெஞ்சம் நீங்கா பள்ளிகால நினைவுகளை கண்டு களிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
254

மறக்குமா நெஞ்சம் விமர்சனம் : மறக்குமா நெஞ்சம் நீங்கா பள்ளிகால நினைவுகளை கண்டு களிக்கலாம் | ரேட்டிங்: 2.5/5

ஃபிலியா மீடியா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா வொர்க்ஸ் சார்பில் ரகு யெல்லுரு – ரமேஷ் பஞ்சாங்குலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ.யோகேந்திரன் தயாரித்திருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராகோ.யோகேந்திரன்.

இதில் ரக்ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின் டென்னிஸ், முனீஷ்காந்த், அருண் குரியன், அகிலா, ஆஷிகா காதர், நாடலியா லூர்ட்ஸ், விஷ்வத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்- கோபி துரைசாமி, இசை – சச்சின் வாரியர் , படத்தொகுப்பாளர்கள் – பாலமுரளி, ஷஷாங்க் மாலி, கலை இயக்குனர் – பிரேம் கருந்தமலை, பாடல் வரிகள் – தாமரை, ஆடை வடிவமைப்பாளர் – ரம்யா சேகர், இணை திரைக்கதை – அக்ஷய் பூலாக், இணை வசனம் – பிரசாந்த் எஸ்.தீனா, ஒலி வடிவமைப்பு – சுகுமார் நலகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர் (தி சவுண்டஹாலிக்ஸ்), ஒலி கலவை – ஜெய்சன் ஜோஸ் (நான்கு பிரேம்கள்), வண்ணக்கலைஞர் – வீரராகவன், ஆடைகள் – நரேஷ் மேக்கப் – ரவி, பப்ளிசிட்டி டிசைன் – ஹீட்ஸ் ஆட் டெக் சொல்யூஷன்ஸ், வடிவமைப்பாளர்கள் – பிரிதிவி ராஜ், சுமன், முருகவேல், ஸ்ரீஹரி சங்கர், டப்பிங் ஸ்டுடியோ – க்ரான்டா ராம்மோ சவுண்ட் நிறுவனம், தயாரிப்பு நிர்வாகி – செல்வா சண்முகம் , கிரியேட்டிவ், தயாரிப்பாளர் – ஸ்ரீPராம் ஆனந்தசங்கர், நிர்வாக தயாரிப்பாளர் – அனிருத் வல்லப் , பிஆர்ஒ – சதீஷ் குமார்

2008ம் ஆண்டு கன்னியாகுமரியில் குளைச்சலில் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ எழுதிய மாணவர்கள் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக இன்னொரு தனியார் பள்ளி தொடுத்த வழக்கின் தீர்ப்பு 2018ல் வெளியாகிறது. அதில் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட பள்ளியில் ப்ளஸ் டூ படித்த அனைவரும் திரும்ப பள்ளிக்கு வந்து மூன்று மாதத்தில் ப்ளஸ் டூ மறு தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதனால் அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் ரக்ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன் மற்றும்; அனைவருக்கும் மறுதேர்வு எழுத அழைப்பு வருகிறது. பத்து ஆண்டுகளில் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வேலை செய்து கொண்டும், திருமணம் முடிந்தும் இருக்க, இந்த அழைப்பால் வேறு வழியின்றி பள்ளிக்கு தேர்வு எழுத வருகின்றனர். பள்ளியில் மீண்டும் வகுப்பறைக்கு வரும் ரக்ஷன் ஒரு தலையாக காதலித்த மலினா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். அப்பொழுது தன் காதலை சொல்ல முடியாமல் போனதை இப்பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சொல்ல நினைக்கிறார். இந்த மூன்று மாதத்தில் இவர்கள் காதல் கை கூடியதா? ப்ளஸ் டூ மறுதேர்வை எழுதினார்களா? நண்பர்கள் நீங்கா நினைவுகளோடு விடை பெற்றார்களா? என்பதை திரையரங்கில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திக்காக ரக்ஷன், பிரியதர்ஷினியாக மலினா ஆகிய இருவரைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது. சொந்தமாக தொழில் செய்யும் ரக்ஷன் தன் பள்ளி நாட்களில் நடந்த சுவாரஸ்மான நிகழ்வுகளையும், தருணங்களையும் மறக்காமல் பள்ளிக்கு படிக்க செல்லும் போது தன் பழைய சூட்கேசில் வைத்து மாணவர்களிடம் காண்பிப்பதும், தன் நண்பர்களிடம் கடைசி பெஞ்;சிற்காக சண்டை, ஒருதலைக்காதல், ஆண்டு விழா, டியூஷன் சென்டர், ஆசிரியர்களிடம் குறும்புகள் என்று பள்ளி மாணவன் கெட்டப்பிலும், இளைஞன் கெட்டப்பிலும் வேறுபடுத்தி காட்ட முடிந்தவரை முயற்சி செய்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹீரோவிற்கு நண்பனாக அறிமுகமாகும் போது படம் முழுவதும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்தவர், இந்த படத்தில் ஹீரோவாக வரும் போது இன்னும் அழுத்தமாகவும், இயல்பாகவும் நடித்திருக்க வேண்டும் இந்த எதிர்பார்ப்பை கூடிய விரைவில் முயற்சி செய்து பூர்த்தி செய்வார் என்பதை எதிர்பார்க்கலாம்.

பிரியதர்ஷினியாக மலினா அழகான தேவதையாகவும் மாணவியாகவும் வந்தாலும் கொடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் குறைவு என்பதால் அதற்கேற்றவாறு பதிவு செய்துவிட்டு போகிறார்.

சலீமாக தீனா ரக்ஷனின் நண்பனாக படபடவென பேசுவதில் வல்லவராக அவ்வவ்போது கொடுக்கும் ஒன் லைன் பஞ்ச் வசனங்கள் காமெடி நெடியோடு கொடுத்து கலகலக்க வைக்கிறார்.

இவர்களுடன் கௌதமாக ராகுல், சரண்யாவாக ஸ்வேதா வேணுகோபால் , ராகவ்வாக முத்தழகன் ,  ஜோசப்பாக மெல்வின் டென்னிஸ், கார்த்திகேயனாக முனிஷ்காந்த் , அர்ஜுனாக அருண் குரியன் , ஜெனிபராக அகிலா, லிண்டோஷாவாக ஆஷிகா காதர், ஷில்பாவாக நடாலி லூர்ட்ஸ், யோகியாக விஷ்வத் ஆகியோர் மாணவ பருவத்தின் நினைவுகளை நிஜமாக்கியிருக்கின்றனர்.

இரண்டு காலகட்டங்களில் நடக்கும் காட்சிக் கோணங்கள், பள்ளி கலாட்டாக்கள் என்று சிறப்பாக  செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமி.

தூமரையின் பாடல் வரிகளுக்கேற்ப துள்ளும் இசை கொடுத்துள்ளார் சச்சின் வாரியர்.

பாலமுரளி, ஷஷாங்க் மாலி படத்தொகுப்பாளர்கள் பிரேம் கருந்தமலை கலை இயக்குனர் ஆகியோர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிக்கு மறுதேர்வு எழுத வரும் மாணவர்களின் கதைக்களத்தில் காதல், மோதல், நட்பு, இழப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று அனைத்தையும் கலந்து கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் ராகோ. யோகேந்திரன். பள்ளி காலத்து இனிக்கும் நினைவுகள், பிடி ஆசிரியர் – கணித ஆசிரியையின் காதல் வாழ்க்கை, தாழ்வு மனப்பான்மையை பாஸிட்வ்வாக மாற்ற முயலும் ஒரு நண்பனின் சம்பவத்தையும், இடமாற்றம் செய்யும் பள்ளி தோழியிடம் காதலை சொல்லி பதிலை பெற்று நிறைவுடன் செல்லும் மாணவனின் மகிழ்ச்சியையும், நிறைமாத கர்ப்பிணி தோழிக்கு சுகபிரசவம் ஏற்பட்ட நெகிழ்ச்சியும், இறுதியில் மாணவர்களை காப்பாற்றும் நீதிமன்ற தீர்ப்பு என்று மறக்குமா நெஞ்சம் என்ற மயக்கும் டைட்டிலுடன் நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக பல வழிகளில் முயன்றுள்ளார் இயக்குனர் ராகோ. யோகேந்திரன். இவரின் முயற்சிக்கும் வித்தியாசமாக கொடுக்க நினைத்திருக்கும் விதத்திலும் பாராட்டலாம்.

ஃபிலியா மீடியா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா வொர்க்ஸ் சார்பில் ரகு யெல்லுரு – ரமேஷ் பஞ்சாங்குலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ.யோகேந்திரன் தயாரித்திருக்கும் மறக்குமா நெஞ்சம் நீங்கா பள்ளிகால நினைவுகளை கண்டு களிக்கலாம்.