வல்லவன் வகுத்ததடா சினிமா விமர்சனம் : வல்லவன் வகுத்ததடா பணத்திற்காக தடம் மாறும் மனிதனடா | ரேட்டிங்: 3.5/5

0
300

வல்லவன் வகுத்ததடா சினிமா விமர்சனம் : வல்லவன் வகுத்ததடா பணத்திற்காக தடம் மாறும் மனிதனடா | ரேட்டிங்: 3.5/5

போகஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விநாயக் துரை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் வல்லவன் வகுத்ததடா.

இதில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், ரெஜின் ரோஸ், அனன்யா மணி, விக்ரம் ஆதித்யா, சுவாதி மீனாட்சி, அருள் டி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜய் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ்

ஆறு பேர்களின் பணத்தேவையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ள படம் வல்லவன் வகுத்ததடா. இதில் ஆண்களை காதலிப்பது போல் ஏமாற்றி பணம் பறிப்பவர் அகல்யா (அனன்யா), கார்களை திருடி விற்கும் இரு நண்பர்கள் தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ், கடனை அடைக்க புகார் கொடுக்க வருபவர்களிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமணி (ராஜேஷ் பாலச்சந்திரன்), வட்டிக்கு கடன் கொடுத்த பிறகு பணம் வசூலிக்க முடியாமல் போனால் உடல் உறுப்புகளை கொடுத்து ஈடு கட்டச் சொல்லும் குபேரன் (விக்ரம் ஆதித்யா), இவர்கள் ஐந்து பேரும் மற்றவர்கள் ஏமாற்றி பணம் பறிப்பவர்கள்.மகளின் சீமந்த செலவிற்கு கடன் வாங்கி வரும் போது தந்தை விபத்தில் அடிபட்டு பணம் தொலைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவரது மகள் உபர் ஒட்டுனரான சுபா (சுவாதி மீனாட்சி) தன் தந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க பணத்திற்காக உறவினர்கள் நணபர்களிடம் கேட்டும், தொலைந்து போன பணத்தையும் மீட்க போராடும் நல்ல பெண் ஆகியோரிடம் இரண்டு கோடி பணம் உள்ள வாகனம் கிடைக்க அதை இவர்கள் ஆறு பேரும் ஒன்று கூடி என்ன முடிவெடுத்தார்கள்? ஏமாற்றுபவர்களின் கையில் பணம் சிக்க தங்கள் பணத்தேவையை இதை வைத்து பூர்த்து செய்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு ஏமாற்றுப்பெண்ணாக அனன்யா , கார் திருடர்களாக தேஜ் சரண்ராஜ் மற்றும் ரெஜின் ரோஸ், கறாராக வசூல் செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன், பலே கில்லாடியாக கந்து வட்டியில் பணம் பார்க்கும் விக்ரம் ஆதித்யா, அப்பாவி கார் ஒட்டுனராக சுவாதி அவரவர்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கி கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அசத்தலாக நடிப்வை வழங்கியுள்ளனர்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு, அஜய் படத்தொகுப்பு, சகிஷ்னா சேவியர் இசை படத்திற்கு முக்கிய பங்களிப்பு பல கோணங்களில் பயணிக்கும் கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

பகவத் கீதை அத்தியாங்களாக ஆறு பேர்களின் கதையை பிரித்து பணத்தேவையால் அனைவரையும் இறுதியில் ஒர்நேர்கோட்டில் இணைத்து ஹைப்பர் லிங்க் கதையாக சொல்ல முயற்சித்திருப்பதில் சில காட்சிகள் குழப்பமானதாகவும், சில காட்சிகள் சிக்கல்களாகவும், சில காட்சிகள் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் சொல்ல வருவதை தெளிவோடு இயக்கியிருக்கலாம் விநாயக் துரை.

மொத்தத்தில் போகஸ் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் வல்லவன் வகுத்ததடா பணத்திற்காக தடம் மாறும் மனிதனடா.