பைண்டர் சினிமா விமர்சனம் : ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 சஸ்பென்ஸ் காட்சிகளுடன் நிரபரதாகிளை விடுவிக்க போராடும் குற்றவியல் கதையை அனைவரும் பார்க்கலாம் சுவாரஸ்யத்துடன் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

0
322

பைண்டர் சினிமா விமர்சனம் : ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 சஸ்பென்ஸ் காட்சிகளுடன் நிரபரதாகிளை விடுவிக்க போராடும் குற்றவியல் கதையை அனைவரும் பார்க்கலாம் சுவாரஸ்யத்துடன் ரசிக்கலாம் | ரேட்டிங்: 3/5

ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பைண்டர் ப்ராஜெக்ட் 1.

இதில் வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்ட்ராயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி ,எடிட்டர் – தமிழ்குமரன் , கலை இயக்கம் – அஜய் சம்பந்தம் , இசை – சூர்ய பிரசாத் ,மக்கள் தொடர்பு – ராஜா

குற்றவியல் சம்பந்தமான படிப்பை முடித்த நிபுணர்கள் வினோத் (வினோத் ராஜேந்திரன்) மற்றும் பல்லவி (தரணி) புதிதாக பைண்டர் ஏஜென்சி என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவத்து வரும் நிரபரதாதிகளை சந்தித்து அவர்களின் சம்மதத்தோடு இலவசமாக வழக்கை நடத்தி விடுவிப்பதே இவர்களின் நோக்கம்.அதற்காக பல நாளிதழ்களில் விளம்பரம் செய்கின்றனர்.இந்த விளம்பரத்தை பார்த்து ரூபி (பிரானா) என்ற இளம் பெண் தொடர்ப்பு கொண்டு தன் தந்தை பீட்டரை (சார்லி) ஜெயில் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைக்கிறார். கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மீனவர் பீட்டரின் கதையை மகள் விவரிக்கிறார். தன் நெருங்கிய மீனவ குடும்பங்களிலிருந்து மாதந்தோறும் சீட்டுக்காக பணம் வசூலித்து சீட்டு கம்பெனியில் கட்டி வருகிறார் பீட்டர். இதனிடையே பணத்தை சுருட்டிக் கொண்டு சீட்டு கம்பெனி முதலாளி ஒடிவிட, மீனவ மக்கள் பீட்டரிடம் சண்டை போட்டு ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று நிபந்தனையுடன் செல்கின்றனர். பல லட்சங்கள் கடனாளியான பீட்டர் தன்னிடம் இருக்கும் படகை விற்றாலும் மீதி பணத்திற்காக என்ன செய்வது என்று மனஉளைச்சலில் இருக்கிறார். இந்நிலையில் அவரது உறவினர் ராயன்(சென்ட்ராயன்) யோசனைப்படி ஒரு கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டு சென்றால் இருவருக்கும் சேர்த்து பத்து லட்சம் பணம் கிடைக்கும் என்றும் அதை வைத்து கடனை சமாளிக்கலாம் என்று சொல்கிறார். இதனை முதலில் மறுக்கும் பீட்டர், பின்னர் ஆறு மாதத்தில் திரும்பி விடலாம் என்றும்,மாதந்தோறும் வக்கீல் ஒருவர் மனைவியிடம் பணம் கொடுப்பார் என்று ராயன் உறுதியோடு சொல்ல வேறு வழியில்லாமல் பணத்திற்காக கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டு சரணடைகிறார். இவர்கள் சரணடையச் சென்றது கவுன்சிலர் கொலை வழக்கு என்பதால் அரசு துரிதமாக செயல்பட, போலீஸ் விசாரணை முடிக்க நீதிமன்றம் இருவருக்கும் ஆயள் தண்டனை வழங்குகிறது. இதனால் ஆறு மாதத்தில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்த பீட்டர் ஆயள் தண்டனையாக மாறியதால் ஜெயிலில் பரிதவிக்கிறார். இதனிடையே ராயன் திடீரென்று இறந்து விட, பீட்டரின் மனைவிக்கு கொடுத்து வரும் பணமும் வக்கீல் கொடுக்காமல் விட்டு விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் பீட்டரின் மனைவி கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார். ரூபியின் மூலம் பீட்டர் குற்றமற்றவர் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட வினோத்தும் பல்லவியும் எட்டு வருடத்திற்கு முன் முடிந்த பீட்டரின் வழக்கை மீண்டும் திறக்கிறார்கள். அதற்காக அவர்கள் சந்திக்க முற்படும் நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் பல திடுக்கிடும் உண்மையை கண்டறிய செய்கிறது. பீட்டரை சிக்கலில் மாட்டிவிட்ட நபர் யார்? அவர்களின் நோக்கம்? கவுன்சிலரை ஏன் கொலை செய்தார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

அப்பாவி மீனவராக பீட்டர் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், எதிர்பாராத சம்பவத்தால் ஏற்படும் அதிர்ச்சியால் நிலை தடுமாறும் நேரத்திலும் செய்யாத குற்றத்திற்காக தன் குடும்பத்தை காப்பாற்ற சிறைக்கு சென்று தண்டனை அனுபவிக்கும் போதும், தனியே தவிக்கும் தன் மகளை நினைத்து அழும் காட்சிகளிலும் உணர்ச்சிகளின் குவியலாக மனதை நெகிழச் செய்கிறார்.

தனியார் புலனாய்வாளராக வரும் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இறுக்கமான முகபாவனையுடன் வலம் வருவதும், துடிப்பாக விசாரணையை மேற்கோண்டு முக்கிய குற்றவாளியை நெருங்கும் சமயத்தில் ஏற்படும் திடுக்கிடும் திருப்பம் என்று பல காட்சிகள் விறுவிறுப்புடன் நகருவதற்கு இவரின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது. இவருடன் பயணிக்கும் தரணி ரெட்டி நடிப்பு குறை சொல்ல ஏதுவுமில்லை

புகழ்பெற்ற குற்றவியல் நிபுணர், ஆலோசகர், வக்கீல் தயாளனாக அசத்தும் வசன உச்சரிப்பில் நிழல்கள் ரவி, அழுத்தமான கதாபாத்திரம், மிகையில்லா நடிப்பு என்றாலும் நல்லது செய்கிறாரா, கெட்டது செய்கிறாரா என்ற குழப்பங்கள் நிறைந்த ராயனாக சென்ட்ராயன், தந்தையை மீட்க போராடும் மீனவ பெண்ணாக பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர் ஆகியோரின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு, தமிழ்குமரன் எடிட்டிங், அஜய் சம்பந்தம் கலை இயக்கம் மற்றும் சூர்ய பிரசாத் இசை என்று தனித்தனியே பிரித்து பார்க்கமுடியாத அளவிற்கு படத்தில் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியையும் குறை காண முடியாத அளவிற்கு த்ரில்லிங்கோடு புலனாய்வு தரத்துடன் கொடுத்துள்ளனர்.

இன்னசென்ஸ் கோர்ட் என்பது  1992 இல் கார்டோசோவில் பாரி சி. ஷெக் மற்றும் பீட்டர் ஜே. நியூஃபெல்ட் ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. கைதிகள், குற்றவியல் ஆய்வகங்கள், பாதுகாப்பு வழக்கறிஞர்களுடன் டிரான்ஸ்கிரிப்டுகள், மருத்துவ அறிக்கைகள், ஆதாரங்களை அணுகும் போது, சோதனை மற்றும் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் போது எழும் அரசியலமைப்பு சிக்கல்களை டிஎன்ஏ சோதனை மூலம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்படும் கைதிகளுக்கு உதவும் சட்டம்.இதனால் ஏராளமான கைதிகள் விடுதலை பெற்று மறுவாழ்வு வாழ்கின்றனர், இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பைண்டர் ப்ராஜெக்ட் 1 படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கி நடித்தும் இருக்கிறார் வினோத் ராஜேந்திரன். மர்மங்கள் நிறைந்த க்ரைம் நாவலை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி த்ரில்லிங் நிறைந்து விறுவிறுப்புடனும், சுவாரஸ்யத்துடனும் புலனாய்வு சம்பந்தப்பட்ட காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகள், பினாமியாக செயல்படும் சாமியார் மடம், தந்தைக்கு ஏற்படும் அவலநிலை, நிலங்களை அபகரிக்க பேராசைப்படும் வில்லன் பீமா, அவருக்கு உடந்தையாக வரும் அடியாட்கள், கொலை, கொள்ளைகளை செய்து விட்டு அப்பாவிகளை சிக்க வைத்து ஜாலியாக உலா வரும் பணக்காரர்களின் இருண்ட பக்கங்களை தோலுரித்து காட்டி வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார் வினோத் ராஜேந்திரன். வெல்டன்.

மொத்தத்தில் ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 வேகத்துடன் அதிரடி திருப்பங்கள், சர்ப்ரைஸ் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் நிரபரதாகிளை விடுவிக்க போராடும் குற்றவியல் கதையை அனைவரும் பார்க்கலாம் சுவாரஸ்யத்துடன் ரசிக்கலாம்.