ரெய்டு சினிமா விமர்சனம் : ரெய்டு எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை | ரேட்டிங்: 2.5/5

0
244

ரெய்டு சினிமா விமர்சனம் : ரெய்டு எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை | ரேட்டிங்: 2.5/5

ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ{டன் எஸ்.கே.கனிஷ்க், ஜி.கே. ஜி.மணிகண்ணன் இயக்கத்தில் கார்த்தி இயக்கி இருக்கும் படம் ரெய்டு.

இதில் விக்ரம் பிரபு, ஸ்ரீPதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தர்ராஜா, டேனியல், ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- சாம்.சி.எஸ். இசை. ஒளிப்பதிவு கதிரவன். படத்தொகுப்பு மணிமாறன். இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு டிஒன்.

பிரபல தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரனுக்கு அடியாட்களாக வேலை செய்யும் ரிஷி ரித்விக் மற்றும் சவுந்தரராஜா. பின்னர் இவர்கள் இருவரும் வேலு பிரபாகரனிடமிருந்து பிரிந்து செல்ல, இதனால் வேலு பிரபாகரன் கோபமடைகிறார்.இதனிடையே நேர்மையான போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு ஊரில் இருக்கும் ரவுடி கும்பலை ஒழிக்க நினைக்கிறார், இந்த என்கவுண்டரில் ரிஷியின் தம்பி டேனியல் கொல்லப்படுகிறார். இதனால் கொதிப்படையும் ரிஷி மற்றும் சவுந்தரராஜா விக்ரம் பிரபுவின் காதலி ஸ்ரீதிவ்யாவை சுட்டு கொல்கின்றனர். இவர்களை பழி வாங்க நினைக்கும் விக்ரம் பிரபு என்ன திட்டம் போட்டார்? இருவரும் சிக்கினார்களா? இறுதியில் ரிஷியும், சவுந்தரராஜாவும்  என்னஆனார்கள்? என்பதே படத்தின் கதை.

போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு விறைப்புடன் முரட்டு ஆக்ஷனுடன்,நடனத்திலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து முடிந்தவரை நியாயம் செய்துள்ளார்.

அவரது காதலியாக ஸ்ரீPதிவ்யா படம் முடியும் தருவாயில் வந்து போகிறார்.

ரௌடிகளாக ரிஷி மற்றும் சவுந்தரராஜா வில்லனாக படத்தில் சண்டைக்காட்சிகளிலும், உருட்டல் அதட்டல் கலந்த செயல்களிலும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

இவர்களுடன் அனந்திகா, டேனியல், ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன் மற்றும் துணை கதாபாத்திரங்கள் படத்திற்கு துணை போகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கதிரவன், சாம்.சி.எஸ். இசை மற்றும் பின்னணி இசை கச்சிதம்.

மணிமாறன் படத்தொகுப்பு கதைக்களம் நான்லீனியராக வரும் காட்சிகளை கோர்வையாக கொடுக்க தவறியிருக்கிறார்.

ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியின் பழைய ஃபார்மூலா பழி வாங்கும் படலத்தை எங்கெங்கோ பயணித்து தடுமாற்றத்துடன் கொடுத்துள்ளார் இயக்குனர் கார்த்தி.

மொத்தத்தில் ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ரெய்டு எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை.