ருத்ரன் திரைவிமர்சனம் : ருத்ரன் – எடுபடவில்லை | ரேட்டிங்: 2/5

0
397

ருத்ரன் திரைவிமர்சனம் : ருத்ரன் – எடுபடவில்லை | ரேட்டிங்: 2/5

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். அவர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ{க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞனான ருத்ரா (ராகவா லாரன்ஸ்) தனது பெற்றோர்களான நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார். பிரியா பவானி சங்கரை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இதனால் தன் நண்பரின் உதவியுடன் பிரியா பவானி சங்கரிடம் காதலை கூறி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். தந்தை நாசர் ஒரு டிராவல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். ரூ.6 கோடி கடன் வாங்கி கம்பெனியை வளர்க்க நினைக்கும் போது நாசரின் நண்பர் அந்த பணத்தை எடுத்து தலைமறைவாகிவிடுகிறார். இதனால் கடன் சுமையில் சிக்கிய நாசர் வருத்தம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். இதனால், ருத்ராவின் குடும்பம் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்கிறது, கடனை எல்லாம் தான்தான் அடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸ் வெளிநாடு சென்று கடனை அடைத்துவிடலாம் என்ற முடிவை எடுத்து தனது குடும்பத்தை இந்தியாவில் விட்டுவிட்டு தனது ஐடி வேலையுடன் லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில், அவரது தாயார் இறந்துவிடுகிறார், மனைவி பிரியா பவானி சங்கரும்; காணாமல் போகிறார். பேரழிவிற்கு ஆளான ருத்ரா அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய வீடு திரும்புகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ராகவா லாரன்ஸ் தலைமறைவாக இருந்து சரத்குமாரின் அடியாட்கள் ஒவ்வொருவரையும் கொன்று வருகிறார். அதன் பின் ருத்ராவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. ருத்ரா அடுத்து என்ன செய்கிறார்? பூமி (சரத்குமார்) கதையுடன் எவ்வாறு தொடர்புடையது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ருத்ரா வேடத்தில் ராகவா லாரன்ஸ் ஒன்றும் பெருசா எடுபடவில்லை. சரத்குமார் தனது நெகட்டிவ் வேடத்தில் தனது இருப்பை உணர்த்துயள்ளார். ப்ரியா பவானி சங்கர் திரையில் சிறிது நேரம் வந்து போகிறார். சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், அபிஷேக் வினோத், சச்சு, சிவாஜித், ரெடின் கிங்ஸ்லி, காளி வெங்கட், ஷியாம் பிரசாத் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சாம் சிஎஸ்-ஸின் பின்னணி இசை சுமார் ரகம. பலவீனமான திரைக்கதைக்கு எடிட்டர் ஆண்டனி கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரா படத்தின் மூலம் வலுவிழந்த திரைக்கதை அமைத்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கதாசிரியர் திருமாறன் சில திருப்பங்களைச் சேர்த்து கதைக்களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்க வேண்டும்.

மொத்தத்தில் ருத்ரன் – எடுபடவில்லை.