சொப்பன சுந்தரி திரைவிமர்சனம்: சொப்பன சுந்தரி காமெடி கலாட்டா| ரேட்டிங்: 3/5

0
104

சொப்பன சுந்தரி திரைவிமர்சனம்: சொப்பன சுந்தரி காமெடி கலாட்டா| ரேட்டிங்: 3/5

எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபா சங்கர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஷ ரா, கருணாகரன், சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவு ஜி.பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன். படத்தொகுப்பு சரத்குமார், புவன் சீனிவாசன். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் – ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைக்க, அஜ்மல் தஹ்சீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு : யுவராஜ்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனக்கு வரப்போகும் பிரச்சனையை அறியாமல் அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை வென்றாள். அகல்யா ஒரு வயதான தந்தை, தாய் (தீபா) மற்றும் ஒரு ஊமை அக்கா தேன்மொழி (லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி) உடன் வசித்து வருகின்றார். ஏழ்மையின் காரணமாக தேன்மொழிக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. அகல்யா ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். அதிர்ஷ்டக் குலுக்கல்லில் கிடைத்த பரிசை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறார் அகல்யா. அந்த சமயத்தில் குடும்பத்தில் இருந்து விலகிய அகல்யாவின் அண்ணன் (கருணாகரன்) அந்த கார் தனக்கு தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார்.  இதனால் கார் போலீசிடம் சிக்கி கொள்கிறது. அங்கே காமம் நிறைந்த இன்ஸ்பெக்டர் பார்வை அகல்யா மீது பாய்கிறது. இதனால் அகல்யாவுக்கு சிக்கல் ஏற்படுகிறது.  இந்நிலையில் அவளது அக்கா தேன்மொழி மற்றொரு குண்டை வீசுகிறாள். காரின் டிக்கிக்குள் ஒரு சடலம் இருப்பதை அவள் அகல்யாவிடம் தெரிவிக்கிறாள். இந்த சிக்கலான சூழ்நிலையையும், காமம் நிறைந்த இன்ஸ்பெக்டரையும் அகல்யா எப்படி சமாளிக்கிறார்? அந்த காரை வெளியில் எப்படி எடுத்தார்கள்? இறுதியில் அந்த காரின் நிலை என்ன என்பதே மீதி கதை.