பூமர் அங்கிள் சினிமா விமர்சனம் : பூமர் அங்கிள் நகைச்சுவையில் தடம் பதிக்க தவறிவிட்டது | ரேட்டிங்: 2/5

0
223

பூமர் அங்கிள் சினிமா விமர்சனம் : பூமர் அங்கிள் நகைச்சுவையில் தடம் பதிக்க தவறிவிட்டது | ரேட்டிங்: 2/5

அங்க மீடியா தயாரித்து ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட் எஸ்எஸ் பிரபு வெளியிட்டிருக்கும் பூமர் அங்கிள் படத்தை இயக்கியிருக்கிறார் சுதேஷ் எம்.எஸ்.

இதில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- எழுதியவர் : தில்லை, ஒளிப்பதிவாளர்: சுபாஷ் தண்டபானி, எடிட்டர்: இளையராஜா எஸ், இசை: சாந்தன் மற்றும் தர்ம பிரகாஷ், கலை இயக்குனர்: பி ஏ ஆனந்த், சண்டைக்காட்சிகள்: சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர்: ரெபேக்கா மரியா, பிஆர்ஒ -ஏ. ஜான்

நேசம்(யோகி பாபு), தனது ரஷிய வெளிநாட்டு மனைவி ஆமி பிரிந்து செல்வதற்காக போடும் கண்டிஷனை ஒப்புக் கொள்வதை வைத்து படம் ஆரம்பமாகிறது.நேசத்தின் பூர்வீக அரண்மனைக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு நாள் தங்கி விட்டு வந்தால் விவாகரத்து தருகிறேன் என்ற வாக்குறுதிக்காக மனைவி ஆனியை அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கே வருவதை அறிந்து கொள்ளும் நேசத்தின் மூன்று முன்னாள் நண்பர்கள் தாவூத் (சேஷ{), பில்லா (பாலா) மற்றும் வல்லரசு (தங்க துரை) முன்பகை காரணமாக பல வருடங்களாக அவரை பழி வாங்க காத்திருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரண்மனைக்கு வருகிறார்கள். இதற்கிடையில், எமி தனது அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னதில் ஒரு உள்நோக்கம் இருப்பதை நேசம் அறிந்து கொள்கிறார்.அங்கே எமியால் ஏற்படும் கடுமையான பிரச்சனையை நேசம் எதிர்கொள்ளும் போது, பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள், நேசம் உடனான கருத்து வேறுபாடுகளை மறந்து அவருக்கு உதவுகிறார்கள்.இறுதியில்; ஆமியின் உள்நோக்கம் என்ன? அவள் என்ன திட்டமிட்டிருக்கிறாள், அவளுடைய திட்டங்களை நேசம் எப்படி முறியடிக்கிறார்? அரண்மனையில் இருக்கும் அறிவியல் கலந்த ரகசியம் என்ன? நேசத்தின் விஞ்ஞானி தந்தைப்பற்றிய விவரங்கள் என்ன? என்பதே பூமர் அங்கிள் படத்தின் க்ளைமேக்ஸ்.

யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு என்று பல தேர்ந்த நடிகர்களின் திறமையை சரியாக பயன்படுத்த தவறி விட்டனர்.

ஒளிப்பதிவாளர்: சுபாஷ் தண்டபானி, எடிட்டர்: இளையராஜா எஸ், இசை: சாந்தன் மற்றும் தர்ம பிரகாஷ், கலை இயக்குனர்: பி ஏ ஆனந்த், சண்டைக்காட்சிகள்: சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர்: ரெபேக்கா மரியா ஆகியோர் முடிந்த வரை ஒரே அரண்மனையில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியை துரத்தல் காட்சிகள், சண்டை, பாடல்கள் என்று அத்தனையையும் சிறப்பாக கொடுத்துள்ளனர்.  பட்ஜெட் படம் என்றாலும் சிஜி தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுதேஷ் எம்.எஸ்.இயக்குனரின் ஒரே நோக்கம் மகிழ்விப்பது மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு, அவரது நகைச்சுவை கதாபாத்திரங்கள் படத்தில் வேலை செய்யவில்லை. திரைக்கதை பலவீனத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது. படம் எதை நோக்கி செல்கிறது என்பதை இரண்டாம் பாகத்தில் இருந்து தான் புரிந்து கொள்ள முடிகிறது. அறிவியல் கலந்த புனை கதையாக ஹல்க், வொண்டர் வுமன், ஜோக்கர் என ஹாலிவுட் பட கேரக்டர்களையெல்லாம் பயன்படுத்தி வித்தியாசமாக முயற்சித்துள்ளார் இயக்குனர் ஸ்வதேஷ் எம் எஸ்.

மொத்தத்தில் அங்க மீடியா தயாரித்து ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட் எஸ்எஸ் பிரபு வெளியிட்டிருக்கும் பூமர் அங்கிள் நகைச்சுவையில் தடம் பதிக்க தவறிவிட்டது.