நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம் : நேற்று இந்த நேரம் த்ரில் தருணங்களில் உணர்ச்சிகள் கலந்த அதிர்வை தர தவறிவிட்டது | ரேட்டிங்: 2.5/5

0
188

நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம் : நேற்று இந்த நேரம் த்ரில் தருணங்களில் உணர்ச்சிகள் கலந்த அதிர்வை தர தவறிவிட்டது | ரேட்டிங்: 2.5/5

கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட் சார்பில் கே.ஆர். நவீன் குமார் தயாரித்திருக்கும் நேற்று இந்த நேரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாய் ரோஷன்.

இதில் ஷாரிக் ஹாசன், ஹரிதா, ​மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை : கெவின், பின்னணி ஸ்கோர் : கெவின், ஒளிப்பதிவு : விஷால், எடிட்டர் : கோவிந்த், சண்டை : ஓம் பிரகாஷ், பாடகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், அறிவு, ஆதித்யா ஆர்கே, ரவி ஜி, பால் பி சைலஸ், கெவின், ரேஷ்மா ஷியாம், பிருத்வி, பாடல் வரிகள் : பிரபாகரன் அமுதன், பால் பி சைலஸ், பிருத்வீ, கெவின், நவீன் குமார், சாய் ரோஷன், ஆனந்த், நிர்வாகத் தயாரிப்பாளர்: லால்குடி ஹரிஹரன், ஒலி வடிவமைப்பு: லால்குடி எம் ஹரிஹரன், மக்கள் தொடர்பு : சதீஸ்வரன்

நேற்று இந்த நேரம் படத்தில் இன்பச் சுற்றலா செல்லும் ஏழு நண்பர்களில் இருவர் காணாமல் போக போலீஸ் துணையோடு அவர்களை கண்டு பிடித்தார்களா? என்பதே படத்தின் கதைக்களமாக பயணிக்கிறது. மூன்று ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கும் நிகில் (ஷாரிக் ஹாசன்) மற்றும் ரித்திகா (ஹரிதா) இதை கொண்டாட மற்ற நண்பர்களான ஆதித்யா, ரோஹித், நித்யா மற்றும் ஹிருத்திக் ஆகியோருடன் ஊட்டியில் ஒரு உல்லாச விடுதியில் தங்குகின்றனர். அதன் பின் ஜாலியாக பொழுதை கழிக்கும் நேரத்தில் நிகிலிடம்  ரித்திகா திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்கிறார். அதை நிராகரிக்கும் நிகில் காதலர்களாக மட்டுமே இருக்கலாம் இல்லையென்றால் விலகிக்கொள்ள சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் ரித்திகா சோகத்தில் இருக்கிறார். இந்நிலையில் மறுநாள் காலையில் நிகில் காணாமல் போகிறார். ஊட்டியில் முகமுடி கொலைகாரன் நடமாடுவதும், தொடர் கொலைகள் செய்வதுமாக இருக்கிறான். இதைக் கேள்விப்படும் நண்பர் ரோஹித் நிகிலை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் செய்கிறார். போலீஸ் விடுதியில் வந்து ஆறு பேரையும் தனித்தனியாக விசாரிக்கின்றனர். அவர்களின் தகவல்கள் போலீசிற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையே மறுநாள் ரோஹித் காணாமல் போகிறார். போலீஸ் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். போலீசார் காணாமல் போன இருவரையும் கண்டுபிடித்தார்களா? கடத்தியவர்கள் யார்? காரணம் என்ன? உண்மையான குற்றவாளி யார்? கடத்தியது முகமுடி கொள்ளையனா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் ஏழு நண்பர்களாகவும், இரண்டு போலீஸ் அதிகாரிகளாகவும் ஒட்டு மொத்த படத்திலேயும் வந்து போகிறார்கள். போலீசின் விசாரணையை எதிர்கொள்ளும் நண்பர்கள் சம்பவங்களை விவரிப்பதில் ஒப்புவிப்பது போலவும், முக்கிய தருணங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தவறிவிட்டதால்  இறுதியில் நடக்கும் சம்பவங்கள் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. சீரியல் கில்லராக வரும் நபரும் கருப்பு உடை வெள்ளை முகமுடி, கையில் பாம்பு வடிவத்தில் பச்சை குத்தி முடிந்த வரை கதையை கொஞ்சம் நகர்த்த வைக்கிறார்.

இசை : கெவின், பின்னணி ஸ்கோர் : கெவின், ஒளிப்பதிவு : விஷால், எடிட்டர் : கோவிந்த், சண்டை : ஓம் பிரகாஷ், பாடகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், அறிவு, ஆதித்யா ஆர்கே, ரவி ஜி, பால் பி சைலஸ், கெவின், ரேஷ்மா ஷியாம், பிருத்வி, பாடல் வரிகள் : பிரபாகரன் அமுதன், பால் பி சைலஸ், பிருத்வீ, கெவின், நவீன் குமார், சாய் ரோஷன், ஆனந்த் ஆகியோரின் முக்கிய பங்களிப்பு தோய்வான சமயங்களில் கை கைடுத்து ஈடு செய்துள்ளனர்.

நான் லீனியர் பாணியில் புலனாய்வு செய்யும் போது என்ன நடந்தது என்று விவரிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேலும் சந்தேகப் பட வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சாய் ரோஷன்.ஒவ்வொரு நண்பர்களுக்கும் முக்கியத்துவத்துவம் கொடுத்ததால் கதாபாத்திர வளர்ச்சியில் இருந்த விவரங்கள் காணாமல் போய், நேற்று இந்த நேரம் பெரிதும் தடம் மாறுகிறது. அனைவரும் சொல்லும் கதை திரும்ப திரும்ப ரீபீட் மோடில் வந்து போவதில் சலிப்பு ஏற்படுத்துவதோடு காதல், நட்பு, சூழ்ச்சி, போதை, பணம், பழி வாங்குதல், கொலை கலந்து ஏழு நண்பர்களைச் சுற்றிவரும் மர்மத் திரில்லரை எழுதி இயக்கியிருக்கிறார் சாய் ரோஷன்.

மொத்தத்தில் கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட் சார்பில் கே.ஆர். நவீன் குமார் தயாரித்திருக்கும் நேற்று இந்த நேரம் த்ரில் தருணங்களில் உணர்ச்சிகள் கலந்த அதிர்வை தர தவறிவிட்டது.