தில்லு இருந்தா போராடு திரைப்பட விமர்சனம் : தில்லு இருந்தா போராடு முயற்சி செய்தால் நினைத்ததை அடையலாம் | ரேட்டிங்: 2/5

0
187

தில்லு இருந்தா போராடு திரைப்பட விமர்சனம் : தில்லு இருந்தா போராடு முயற்சி செய்தால் நினைத்ததை அடையலாம் | ரேட்டிங்: 2/5

கே.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தில்லு இருந்தா போராடு.

இதில் வனிதா விஜயகுமார், கார்த்திக்தாஸ்‌, அனுகிருஷ்ணா, யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷ_, ‘லொள்ளு சபா’ மனோகர், ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீPநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.

விஜய்திருமூலம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.சாயீ தர்ஷன் இசையமைத்திருக்கிறார். ஆண்ட்ரோ படத்தொகுப்பு, எஸ்.கே.முரளிதரன், ஸ்ரீPவிஜய், சதீஷ்காந்த் ஆகியோர் பாடல்கள் எழுத, மின்னல் முருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சோழிங்கர் எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்களாக எஸ்.கே.முரளிதரன் மற்றும் எம்.மணிவண்ணன் பணியாற்றியிருக்கிறார்கள். மக்கள் தொடர்பு – விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா.

பட்டப் படிப்பு படித்து தகுந்த வேலை கிடைக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த கிராமத்து இளைஞன் பாண்டி. ஊரில் பெரும் பணக்காரர் தென்னவனின் மகள் பிரியாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டு பின்னால் சுற்றுகிறான். பின்னர் தன் காதலை கூற அவனது காதலை பிரியா ஏற்க மறுக்கிறாள். பாண்டி அவளை துரத்தி துரத்தி பின் தொடர்ந்து காதலை சொல்லி டார்ச்சர் செய்கிறான்.  பொறுமை காத்த பிரியா ஒரு கட்டத்தில் கோபப்பட்டு இது பற்றி தன் தந்தையிடம் கூற அவர் அவனது பெற்றோர்களிடம் சொல்லி மிரட்டிவிட்டு போகிறார். பல முறை அவமானம் பட்டும் பாண்டி அவளை காதலிக்குமாறு மீண்டும் மீண்டும் தொல்லை கொடுக்கிறான். இதனால் ஒரு கட்டத்தில் காவல் நிலையம் வரை பாண்டி செல்ல நேரிட,  பாண்டியின் தாய் மன்றாடிய பிறகு தென்னவன் மீண்டும் ஒருமுறை அவனை மன்னிக்கிறார். தன் காதலை ஏற்க மறுக்கும் காதலி பிரியாவை நினைத்து பாண்டி குடிக்கு அடிமையாகி வீட்டிற்கு சென்று பிரியாவிடம் அத்து மீறுகிறான். இதைப் பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன் பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. அப்போது அவனுக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’யின் உதவியும் கிடைக்கிறது. அதனால் மெல்ல காலூன்றும் வேளையில், பிரியாவின் காதலும் பாண்டிக்கு கை கூடுகிறது. அனாதை குழந்தைகளை அழைத்து வந்து பாடம் நடத்தும் உன்னத பணியை மேற்கொள்கிறான் பாண்டி. அத்துடன் கூடவே புதுப் பிரச்சினைகளும் பாண்டிக்கு வந்து சேர்க்கின்றது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளித்து ஜெயிக்கிறான்? காதலித்த பிரியாவை திருமணம் செய்து கொண்டானா? ஊர் மக்கள் போற்றும் மனிதனாக மாறினானா?  என்பது தான் ‘தில்லு இருந்தா போராடு படத்தின் மீதிக்கதை.

கார்த்திக்தாஸ்‌ மற்றும் அனுகிருஷ்ணா இருவரும் படம் முழுவதும் சிறப்பாக இயல்பாக நடித்துள்ளனர். ஆண்களே மிரளும் ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் உருட்டல், மிரட்டலுடன் அதகளமாக வலம் வந்து போகிறார்.இவர்களுடன் யோகி பாபு, ராஜசிம்மன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷ_, ‘லொள்ளு சபா’ மனோகர், ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீPநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோர் படத்திற்குகேற்ற பங்களிப்பை நிறைவாக கொடுத்துள்ளனர்.

விஜய் திருமூலம் ஒளிப்பதிவு, ஜி.சாய்தர்ஷன் இசை, எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீPவிஜய், சதீஸ்காந்த் மூவரின் பாடல்கள், மின்னல் முருகன் சண்டை பயிற்சி, எடிசன், ஜாய் மதி, சாய் கேசவ் மூவரின் நடனம் அச்சு அசலாக கிராமத்து காதல் கதைகளத்தை யதார்த்தமாக கொடுத்துள்ளனர்.

முதல் பாதி காதலை மையமாக வைத்தும்  இரண்டாம் பாதி சமூக அக்கறையோடு கல்வியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தியும் பழைய ஃபார்மூலா கதைக்களத்திற்கு இயன்றவரை புது வர்ணம் பூச முயற்சித்துள்ளார் அறிமுக இயக்குநர் எஸ்.கே.முரளிதரன்.

மொத்தத்தில் கே.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பி.பிரசாத் தயாரித்துள்ள தில்லு இருந்தா போராடு முயற்சி செய்தால் நினைத்ததை அடையலாம்.