கபில் ரிட்டன்ஸ் விமர்சனம் : கபில் ரிட்டன்ஸ் நினைத்ததை சாதிக்க வயது முக்கிமில்லை உறுதியும் தன்னம்பிக்கை இருந்தால் அனைவரும் சாதனையாளர்கள் தான் என்பதைச்சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

0
221

கபில் ரிட்டன்ஸ் விமர்சனம் : கபில் ரிட்டன்ஸ் நினைத்ததை சாதிக்க வயது முக்கிமில்லை உறுதியும் தன்னம்பிக்கை இருந்தால் அனைவரும் சாதனையாளர்கள் தான் என்பதைச்சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் கபில் ரிட்டன்ஸ் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்.

இதில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்(அசோக்), நிமிஷா(மீரா), பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான்(பிரகாஷ்), வையாபுரி (ராஜூ) மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான் , சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- ஷியாம் ராஜ், இசை -ஆர்.எஸ்.பிரதாப் ராஜ், எடிட்டிங்-வில்சி, நடனம்-சங்கர், சண்டை பயிற்சி- குன்றத்தூர் பாபு , பாடல்கள்- பா.விஜய், சினேகன், அருண்பாரதி, பாடியவர்கள்- ஸ்ரீனிவாஸ், திவாகர், மானசி, நிர்வாக தயாரிப்பு- ஏ.ஆர்.சூரியன் ,மக்கள் தொடர்பு – வெங்கட்

மனைவி நிமிஷா, மகன் மற்றும் தந்தையுடன் தொழில்நுட்ப துறையில் வேலை செய்து வசதியாக வாழ்கிறார் ஸ்ரீPனி. ஒரே மகன் மீது அன்பை பொழியும் பெற்றோர், தாங்கள் நினைக்கும் படிப்பை படிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர். மகன் டாக்டராக வேண்டும் என்று தாயும், இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும்; தினமும்; அதையெல்லாம் சொல்லி அவர்களுக்குள் சண்டையிடும் போது இதைப் பற்றி ஒரு பொருட்டாக நினைக்காமல் வீடியோ கேம், மொபைல் போன், கிரிக்கெட் என்று தன் இஷ்டப்படி இருக்கிறான் மகன். இதனிடையே பள்ளியில் ஸ்ரீனியின் மகன் கிரிக்கெட்; பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட, பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தெரியபடுத்துகின்றனர். நன்றாக கோச்சிங் கொடுத்தால் சிறந்த பௌலராக வரலாம் என்று கூற, ஸ்ரீனி இதற்கு சம்மதிக்க மறுத்து மகன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும் கண்டிப்புடன் சொல்கிறார். அதன் பின் ஸ்ரீPனி நடவடிக்கைகளில் பெரிய மாற்றமும், மன உளைச்சலுடன் காணப்படுகிறார். இதற்கு காரணம் என்ன என்பதை மனைவி நிமிஷா அறிய முற்படுகிறார். தனக்கு சிறு வயதில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீனி கூறுகிறார். அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக மனைவி தேடி கண்டுபிடித்து ஸ்ரீனியின் மனஉளைச்சலை போக்குகிறார். அதன் பின் தன் மகன் கிரிக்கெட் விளையாட உறுதுணையாக இருக்கிறார் ஸ்ரீனி. இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெற அதில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீனி மகன் தவறாக பந்து வீசியதாக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், ஆடுகளத்தில் இருக்கும் குறைபாட்டினால் தான் என்று தேர்வு செய்யும் நடுவர்களிடன் விவரித்து தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார் ஸ்ரீனி. ஆனால், அவருடைய வாதத்தை ஏற்காத தேர்வுக் குழுவின் ஒருவரான ரியாஸ் கான், அவரது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க ஸ்ரீனிக்கு ஒரு போட்டி வைக்கிறார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உரையும் அளவுக்கு ஸ்ரீனி அந்த சவாலில் வெற்றி  பெற்று தன் திறமையை நிரூபிக்கிறார்.இதனை பார்த்து வியக்கும் தேர்வுக்குழு எடுக்கும் முடிவு என்ன? நாற்பது வயதை கடந்த ஸ்ரீனி நிர்ணயித்த இலக்கை அடைந்தாரா?அதற்காக என்ன பயிற்சிகள் செய்தார்? கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த ஸ்ரீனி தன் வாழ்நாள் கனவை சாதனையாக்கினாரா? மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் தந்தை அசோக்காக மகனின் மீது அளவு கடந்த பாசத்தை பொழிந்து, அவனுக்காக சிபாரிசு செய்யப் போக, தனக்கு ஏற்பட்ட சிக்கலை லாவகமாக கையாண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனை என்று கைதேர்ந்த நடிகர் போல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். மனஉளைச்சலில் சிக்கி தவிக்கும் போது உணர்ச்சிகளின் வெளிப்பாடும், விளையாட்டு களத்தில் தன் உழைப்பையும் சரிசமாக கொடுத்து படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்து கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். கதையின் நாயகன் மட்டுமில்லாமல் படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்.

நிமிஷா மனைவி மீராவாக குடும்பத்தில் அனைவரிடமும் பாசமும் நேசமும் காட்டி, தன் கணவன் படும் துன்பத்தை கேட்டு, உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுத்து சரி செய்து கணவனுக்கு உற்ற துணையாக வலம் வரும் கதாபாத்திரம் கச்சிதம்.

இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான்(பிரகாஷ்), வையாபுரி (ராஜூ) மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான் , சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி ஆகியோர் படத்தின் தூண்கள்.

ஒளிப்பதிவு- ஷியாம் ராஜ், இசை -ஆர்.எஸ்.பிரதாப் ராஜ், எடிட்டிங்-வில்சி, நடனம்-சங்கர், சண்டை பயிற்சி- குன்றத்தூர் பாபு  ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு படத்திற்கு பெரிய பலம்.

படத்தின் கதைக்களத்திற்கு கேற்ப மறக்க நினைத்த விளையாட்டு கனவை மகன் மூலம் நிஜமாகும் போது எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பதை சிறப்பாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கனவை நனவாக்க உறுதுணையாக இருந்தால் போதும் லட்சியத்தை அடைவார்கள் என்பதும் அதே சமயம் தங்கள் ஆசைகளை பிள்ளைகளிடம் திணிக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் படம். இந்தப் படத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதையே படம் முழுவதும் காட்டாமல் யதார்த்தமாக, வித்தியாசமாக காட்சிப்படுத்தி படத்தின் தன்மை மாறாமல் சுவாரஸ்யம் மற்றும் திருப்பங்களுடன் அசத்தியுள்ளார் இயக்குனர் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன். முதல் பாதியை விட இரண்டாம் பாதி தான் படத்திற்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் கபில் ரிட்டன்ஸ் நினைத்ததை சாதிக்க வயது முக்கிமில்லை உறுதியும் தன்னம்பிக்கை இருந்தால் அனைவரும் சாதனையாளர்கள் தான் என்பதைச்சொல்லும் படம்.