ராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம்

0
202

ராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம்

2டி எண்டர்டைன்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படம் அமேசான் பிரைம் வெளியீட படத்தை இயக்கியிருக்கிறார் அரசில் மூர்த்தி.
மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லட்சுமி, மனோஜ் தாஸ், செல்வேந்திரன், பருதி, சதீஷ்குமார் ஆகியோர் நடிப்பில் வந்துள்ள படம் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுகுமார்.எம், இசை – கிரிஷ், பாடல்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார், படத்தொகுப்பு-சிவ சரவணன், கலை – முஜிபுர் ரகுமான், நடனம்-சிவாஜி, சண்டை-ராக் பிரபு,நிர்வாக தயாரிப்பு-செந்தில்குமார், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

பூச்சூர் கிராமத்தில் வசிக்கும் குன்னிமுத்து (மித்துன் மாணிக்கம்) வீராயியை(ரம்யா பாண்டியன்)திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு வெள்ளையன், கருப்பன் என்ற இரட்டை காளை மாடுகள் சீதனமாக கிடைக்கிறது. தன் சொந்த பிள்ளைகளாக பாசத்தோடு வளர்க்கிறார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இரட்டை காளை மாடுகள் காணாமல் போகின்றது. அவற்றை தேடி அலையும் குன்னிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால் அவரின் புகாரை ஏற்க மறுத்து அவமான படுத்தப்படும் குன்னிமுத்துவிற்கு தொலைக்காட்சி நிருபரான நர்மதா பெரியசாமி (வாணி போஜன்) மூலம் பட்டி தொட்டி எல்லாம் அறிமுகமாகிறார். இதனால் அவரின் வீட்டிற்கு ஊடகங்கள் படைஎடுக்க, மாநில மத்திய அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள், விவசாய சங்கங்கள் என்று அவரை காண வந்து விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாரலும் அறியப்பட்ட முகமாக காணப்பட்டாலும் , யாராலும் தன் மாடுகளை கண்டு பிடிக்க முடியாத நிலையில் தவிக்கிறார் குன்னிமுத்து. இவரின் காளை மாடுகள் யாரால் திருடிச்செல்லப்பட்டது? இதற்கு காரணம் என்ன? குன்னிமுத்து காளை மாடுகளை கண்டுபிடித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
மித்துன் மாணிக்கம் அச்சு அசலாக கிராமத்து அப்பாவி இளைஞராக, ஒவ்வொரு காட்சியிலும் வெள்ளேந்தி மனசோடு பேசும் வசனங்கள், தேடி அலையும் இடங்கள், காளை மாடுகளின் மேல் பாசம் என்று அனைத்திலும் தன் வெளிப்பாட்டை சிறப்புற கொடுத்திருக்கிறார்.

ரம்யா பாண்டியன் வீராயியாக குன்னி முத்துவின் மனைவியாகவும், கணவனின் பரிதவிப்பை உணர்ந்து ஆறுதல் சொல்வதும், மாடுகளை நினைத்து கண்ணீர் விடுவதும், அரசியல்வாதிகளை கண்டு பொங்குவதும், கிராமத்து மங்கையாக நச்சென்று சில இடங்களில் கேள்வி கேட்பது சிந்திக்க வைக்கிறது என்பதோ உண்மை நடிப்போ அருமை.

இவர்களுடன் பயணிக்கும் நகரத்து நிருபராக வாணிபோஜன் படத்தில் முக்கிய பங்களிப்போடு அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து கிராமத்திக்கு நன்மை செய்தும் துணிச்சலான  கதாபாத்திரம் ஏற்று அசத்தியிருக்கிறார்.
மற்றும்  வடிவேல் முருகன், லட்சுமி, மனோஜ் தாஸ், செல்வேந்திரன், பருதி, சதீஷ்குமார் ஆகியோர் படத்தின் விறுவிறுப்பு தன்மை மாறாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

கிரிஷ் இசையில் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோர் பாடல்கள் மனதிற்கு இனிய வரிகளோடு அர்த்தத்தோடு  கிராமத்து வாசனையோடு கொடுத்திருக்கிறார்.
கிராமத்து ஏழிலை, அல்லல்களை, சிரமங்களை, எளிய கிராமத்து வாழ்க்கையை அளவோடு, நகரத்தின் கலவையோடு ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு பாராட்டுக்கள்.

சிவ சரவணனின் படத்தொகுப்பும், முஜிபுர் ரகுமானின் கலையும் படத்தில் பேசப்படும்.

இயக்கம்-அரசில் மூர்;த்தி. ஏனாதி போலீஸ் நிலையத்தில் தொடங்கும் காட்சி முதல் மலை ரோடில் முடியும் இறுதிக் காட்சி வரை படத்தின் திரைக்கதையை ஏற்ற இறக்கமில்லாமல் கொடுத்து அதில் ஊடகத்தின் பங்களிப்பு, புகழுக்காக அரசியல்வாதிகளின் கபட நாடகம், அரசியல் பின்னணியில் நடைபெற்ற களவாணித்தனம், நிதி ஒதிக்கீட்டில் உள்ள சீர்கேடுகள், வெளி வேஷம் போட்டு ஏமாற்றித் திரியும் அரசியல்வாதி, அவரின் சதியால் மாடுகளை தொலைத்து விட்டு அல்லாடும் ஏழை கிராமத்து இளைஞன் என்று யதார்த்தமாக கதையை நகர்த்தியிருக்கிறார். யார் நம்மை ஆண்டாலும் நம்முடைய குறைகளை தீர்க்க நாமே தான் முயற்சி செய்து கொள்ள வேண்டும் யாரும் உதவப்போவதில்லை என்பதை ஆணத்தரமாக சொல்லியிருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும். இதனை கிராமத்து பின்னணியில் அரசியல் கலந்து நக்கல் நய்யாண்டியுடன் கொடுத்திருக்கும் விதமே இதன் வெற்றிக்கு வழி வகுக்கும். பல விருதுகளை அள்ளிச்செல்ல காத்திருக்கிறது என்பதே உண்மை.

மொத்தத்தில் 2டி எண்டர்டைன்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்திருக்கும் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் கிராமத்து மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை நையப்புடைந்து நிறைவாக மக்கள் மனதில் நிற்கும் வெற்றி மகுடம்.