தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்… மாஸ்டர் ரிலீசுக்கு வைத்த கோரிக்கை

0
252

தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்… மாஸ்டர் ரிலீசுக்கு வைத்த கோரிக்கை

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், பணியாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே ஓடிடி தளங்களில் சூர்யா நடித்த சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய நட்சத்திரங்களின் படங்களும் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

நவம்பர் 10-ம் தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் வெளிவராததால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை. இதனால் ஏராளமான திரையரங்குகள் மூடப்பட்டன. மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி வரும் என்று கணக்குப் போட்டு காத்திருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். அரசின் அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.