பழகிய நாட்கள் விமர்சனம்

0
502

பழகிய நாட்கள் விமர்சனம்

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில்; பழகிய நாட்கள் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார்.

மீரான், மேகனா, பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், சாய் ராதிகா, ஹீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜான் ஏ. அலெக்ஸ்,ரூபேஷ், ஷேக் மீரா, பின்னணி இசை-ஷேக் மீரா, ஒளிப்பதிவு -பிலிப் விஜயக்குமார், மணிவண்ணன், எடிட்டிங்-துர்காஷ், நடனம்-எடிசன், பிஆர்ஓ – வெங்கட்.

பள்ளிப் பருவத்தில் நண்பர்களான பழகும் மீரான், மேகனா இருவரும் காதலிக்கிறார்கள். இருவரின் பழகும் முறையை பார்க்கும் பெற்றோர்கள் இருவரையும் பிரிக்க முயல்கின்றனர். மேக்னாவுடன் அவரது பெற்றோர் வேறு நகரத்திற்கு மாற்றாலாகி போய் விட அங்கே மேக்னா டாக்டராகி சொந்த ஊர் திரும்புகிறார். ஆனால் மீரானோ வெட்டியாக ஊர் சுற்றி குடித்து தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் திரிகிறார் என்பதை அறிந்து மேக்னா வருத்தப்படுகிறார். இதனால் மேக்னா மீரானை திருத்த என்ன செய்கிறார்? என்பதே மீதிக்கதை.

புதுமுகம் மீரான், மேகனா ஜோடிகளாக களமிறங்க இவர்களுடன் செந்தில் கணேஷ், சாய் ராதிகா, ஹீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் ஆகியோர் பக்கபலமாக நின்று தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஜான் ஏ. அலெக்ஸ்,ரூபேஷ், ஷேக் மீரா ஆகியோரின் இசையும், பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவும் படத்தை கவனிக்க வைக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் – ராம்தேவ். இளம் வயதில் ஏற்படும் காதல்  அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருக்கும் உண்மையை உணர்ந்தவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் மற்றவர்கள் எப்படி தொலைத்து விடுகிறார்கள் என்பதை உணர்த்தி  தகுந்த வயதில் பக்குவப்பட்ட காதல் தான் உண்மையானது என்பதை கூறும் காதல் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார் ராம்தேவ்.

பழகிய நாட்கள் இனிய காதல் நினைவுகள்.