சிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

0
230

சிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய் பாடல்கள் ஹிட் அடித்தன. சிம்பு, த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்தது. அதனைத்தொடந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள்.

இந்நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது. இரண்டு படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர். தற்போது, இந்தக் கூட்டணியுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.