கொம்பு விமர்சனம்

0
1020

கொம்பு விமர்சனம்

சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம்.பன்னீர்செல்வம் மற்றும் வானதி தயாரித்து ‘கொம்பு” படத்தை இயக்கியிருக்கிறார் இ. இப்ராகிம்.
இதில் ஜீவா ( லொள்ளு சபா),திஷா பாண்டே,பாண்டியராஜன்,சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:-இசை-தேவ்குரு, ஒளிப்பதிவு – சுதீப், பாடல்கள் -இப்ராகிம்,வெங்கடேஷ் பிரபாகர்,கிருத்திகா கோபிநாத், பாடியவர்கள் -வேல்முருகன்,சைந்தவி, ஜீ.வி. பிரகாஷ் குமார், தேவ் குரு,அருண்ராஜா காமராஜ்;, கலை -ஆனந்த்மணி,படத்தொகுப்பு- கிரீசன், ஸ்டண்ட் – கஜினி குபேந்தர், நடனம் – ராதிகா, புரொடக்ஷன் எக்ஸ்கியூட்டிவ் – சரவணன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பு – ரவிசங்கர். மக்கள் தொடர்பு – விஜயமுரளி, கிளாமர் சத்யா.
ஆவிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டேயின் அறிமுகம் சித்தப்பா பாண்டியராஜன் மூலம் கிடைக்க சினிமா இயக்கும் ஆசையில் இருக்கும் ஜீவாவும் கதைக்காக இவர்களுடன் கிராமத்தில் நடக்கும் இரண்டு மர்மங்களை கண்டுபிடிக்கச் செல்கிறார். அங்கே சாமியார் வைத்திருசந்த கொம்பு மூலம் தான் இறந்தார்கள் என்று கிராமத்து மக்கள் சொல்கிறார்கள். மரணங்கள் நடந்த வீட்டிற்கு சென்று ஆராய்ச்சி செய்ய இவர்களை பேய் துரத்துகிறது? உண்மையில் கொம்பு மூலமாக ஆவி பழிவாங்கியதா? இறுதியில் இந்த மர்ம மரணங்களுக்கு காரணம் ஆவியா ஆசாமியா? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
நாயகனாக ஜீவா ( லொள்ளு சபா) காமெடி கலந்த நடிப்பிலும் ,திஷா பாண்டே கதைக்கேற்ற நாயகியாக கவர்ச்சி நடிப்பிலும்,பாண்டியராஜன்,சுவாமிநாதன்,கஞ்சா கருப்பு,அம்பானி சங்கர், யோகேஸ்வரன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
தேவ்குருவின் இசையில் பாடல்களும், சுதிப்பின் ஒளிப்பதிவும் படத்தின் காட்சிகளுக்கு வலுவாக உள்ளது.
இயக்கம்-இ.இப்ராகிம். இரண்டு மர்மமான மரணங்களின் காரணத்தை கண்டறிய செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் காமெடி, காதல் கலந்து கொடுத்து சுவாரஸ்யமாக இயக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் இ.இப்ராகிம்.
ஆவிகளை அடித்து விரட்ட பயன்பட்ட கொம்பு.