கருப்பங்காட்டு வலசு விமர்சனம்

0
305

கருப்பங்காட்டு வலசு விமர்சனம்

கிராமத்து தலைவரின் மகளான நிலீமா இசை தன்னுடைய கருப்பங்காட்டு வலசு கிராமத்தை நவீனமாக்க பலவிதங்களில் உதவி செய்கிறார். கழிப்பறை வசதி, சிசிடிவி காமிரா என்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெறுகிறார். அதன் பின் ஊர் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவே அந்த கிராமத்து மக்களில் நான்கு பேர் இறந்து கிடக்கிறார்கள். போலீஸ் இவர்களின் மரணத்திற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இறுதியில் இந்த நான்கு மரணத்தின் பின்னணியில் நடந்தது என்ன என்பதே க்ளைமேக்ஸ்.
எபிநேசர் தேவராஜ், நிலீமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லதுரை, கௌரிசங்கர்,ஜிதேஷ் டோணி, சந்தியன் ஆகியோரின் நடிப்பு படத்தின் விறுவிறுப்புக்கு துணை போகிறது.
ஷரவன் சரவணனின் ஒளிப்பதிவும், ஆதித்யாவின் இசையும், தமிழ் குமரனின் படத்தொகுப்பும் கிராமத்து மண் மணத்தோடு காட்சிக்கோணங்களை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் கலகலப்பாக ஆடல் பாடலோடு செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சான மரணங்களின் பின்னணியில் கதை பயணித்து இறுதி வரை சஸ்பென்சாக நகர்த்தி பக்குவமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன். சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தன்னால் முடிந்த வரை சிறப்பாக பணியாற்றியிருக்கும் இயக்குனரின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
கருப்பங்காட்டு வலசு பார்க்கலாம்.