திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலனின் மகள் தற்கொலை… திரைத்துறையினர் அதிர்ச்சி

0
156

திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலனின் மகள் தற்கொலை… திரைத்துறையினர் அதிர்ச்சி

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Being Women என்ற பெண்களுக்கான ஆங்கில இதழின் நிறுவன ஆசிரியராக தூரிகை பணியாற்றி வந்தார். இதன் முதல் பதிப்பை கடந்த 2020 செப்டம்பர் மாதம் இயக்குனர் பா.ரஞ்சித், சேரன், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தூரிகை கபிலன் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலேயே இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாடலாசிரியர் கபிலன் உடைய மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

தூரிகையின் போனை பறிமுதல் செய்துள்ள அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட பாடலாசிரியரான கபிலன் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.