லில்லி ராணி விமர்சனம் : லில்லி ராணி தரமற்ற திரைக்கதையால் பாழடைந்த ஒரு நல்ல கரு | ரேட்டிங்: 2/5

0
314

லில்லி ராணி விமர்சனம் : லில்லி ராணி தரமற்ற திரைக்கதையால் பாழடைந்த ஒரு நல்ல கரு | ரேட்டிங்: 2/5

நடிகர்கள்: சாயா சிங் – ராணி,  ‘பேபி’ ராஃஅத் பாத்திமா – லில்லி, தம்பி ராமையா – சம்பவ மூர்த்தி,  துஷ்யந்த் – மைக்கேல், ஜெயப்பிரகாஷ் – மந்திரி அற்புதம்.
கலை: விஜய வீரன்
பாடலாசிரியர்: ஞானகரவேல்
இசையமைப்பாளர்: ஜெர்வின் ஜோஷ்வா
பின்னணி இசை சேரன்
ஒளிப்பதிவாளர்: சிவ தர்ஷன்
எடிட்டர்: பெஸ்வந்த் வெங்கடேஷ்
தயாரிப்பு நிறுவனம்: கிளாப்பின் சினிமாஸ்
தயாரிப்பாளர்: செந்தில் கண்டியார்
இயக்குனர்: விஷ்ணு ராமகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு: பி.ஸ்ரீ வெங்கடேஷ்

பாலியல் தொழிலாளியாக இருக்கும் ராணிக்கு (சாய் சிங்) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை புற்றுநோயயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரச்சனையை தீர்க்க இந்த குழந்தையின் அப்பா வேண்டும் என்கிறார் மருத்துவர். இதனால் ராணி தனது குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்கும் வேட்டையில் இறங்குகிறார். நீண்ட தேடுதலுக்கு பிறகு அப்பாவை கண்டுபிடிக்கிறார்இ அவர்தான் வயதான போலீஸ்காரர் சம்பவமூர்த்தி (தம்பி ராமையா). அறுவை சிகிச்சை செய்ய 50 லட்சம் செலவாகும் என்பதால் தம்பி ராமையா ஒரு திட்டம் போடுகிறார். ஆனால் ஏற்கனவே ராணியிடம் மந்திரி மகன் ஒருவன் உறவு வைத்திருப்பது தெரிகிறது. குழந்தை அவனுக்கு  பிறந்தது என்று சம்பவ மூர்த்தி பிளேட்டை திருப்பி போட்டு அவனிடம் பணம் பறிக்க திட்டம் போடுகிறார்இ கடைசியில் உண்மையான தந்தை மற்றும் சரியான நேரத்தில் தனது குழந்தையை காப்பாற்றினாரா ராணி என்பதே படத்தின் மீதி கதை.

சம்பவ மூர்த்தியாக (தம்பி ராமையா) மற்றும் ராணியாக(சாயா சிங்) இருவரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில்  ஓவர் ஆக்டிங் என்றில்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் (துஷ்யந்த்), லில்லி (பேபி ராஃஅத் பாத்திமா), க்ளைமாக்ஸில் மட்டுமே மந்திரியாக அற்புதமாக தோன்றும் ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர். அவ்வளவு தான்.

சிவ தர்ஷன் ஒளிப்பதிவு, ஜெர்வின் ஜோஷுவாவின் இசை, சேரனின் பின்னணி இசை, பேஸ்வந்த் வெங்கடேஷ் படத்தொகுப்பு எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை.

அபூர்வ உடல் ஊனத்தால் அவதிப்படும் தன் குழந்தையை மீட்கும் பாலியல் தொழிலாளியின் ஒரு சுவாரஸ்யமான கதையை சில்லியான திரைக்கதை அமைத்து சொதப்பலாக முடித்துள்ளார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்.

மொத்தத்தில் கிளாப்பின் சினிமாஸ் – செந்தில் கண்டியார் தயாரித்துள்ள லில்லி ராணி தரமற்ற திரைக்கதையால் பாழடைந்த ஒரு நல்ல கரு.