‘திருவிழா போல ஏற்பாடு’ – கொட்டும் மழையிலும் ‘பீஸ்ட்’ முதல் காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்

0
101

‘திருவிழா போல ஏற்பாடு’ – கொட்டும் மழையிலும் ‘பீஸ்ட்’ முதல் காட்சிக்கு தயாராகும் ரசிகர்கள்

மதுரையில் கொட்டும் மழையிலும் பீஸ்ட் திரைப்பட வெளியீட்டிற்காக திரையரங்கை விஜய் ரசிகர்கள் தயார் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு விஜய் ரசிகர்கள் நடிகர் விஜயின் ராட்சத பேனர் மற்றும் கட்-அவுட்களை அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், திரையரங்க வாயிலில் கட்அவுட், தோரணம் கட்டுதல் என பீஸ்ட் திரைப்பட வெளியீட்டை திருவிழாபோல ஏற்பாடு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்கில் விஜய் உருவம் பதித்த பதாகைகள் வைத்தும் கட்அவுட் கட்டியும், விஜய் கட்அவுட்-க்கு மாலை அணிவித்தும், வானவேடிக்கையுடன் பீஸ்ட் திரைப்படத்தை காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்,