தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் தன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி சார்ந்த கவனத்தை வலுப்படுத்துகிறது கோடக் லைஃப்!

0
219

தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பில் தன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி சார்ந்த கவனத்தை வலுப்படுத்துகிறது கோடக் லைஃப்!

ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்க ஏழு நடமாடும் மருத்துவ வேன்களை அறிமுகப்படுத்துகிறது!

  • நடப்பு நிதியாண்டின் மொத்த கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கினை தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதாரம், கண் பராமரிப்பு, சிறுநீரகப் பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த அர்ப்பணித்தது, கோடக் லைஃப்!

 சென்னை, 7 மார்ச் 2024

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Kotak Mahindra Life Insurance Company Limited) ஏழு புதிய நடமாடும் மருத்துவ வேன்கள் (Mobile Medical Vans) மூலம் தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. இந்த வியூக முயற்சியானது மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோடக் லைஃப் அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் (CSR) கீழ், ஸ்மைல் அறக்கட்டளையுடன் (Smile Foundation) இணைந்து சென்னையில் மூன்று எம்.எம்.வி.களையும் (MMV), தூத்துக்குடி மற்றும் விருதுநகரில் தலா இரண்டு எம்.எம்.வி.களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த எம்.எம்.வி.க்கள் சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டுசென்று, சுகாதாரப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வாகனத்தை இயக்கும் செலவுகள், மருத்துவப் பொருட்களை வழங்குதல், எம்.எம்.வி.களின் திறமையான செயல்பாட்டை உறுதிசெய்யும் பணிகளை கோடக் லைஃப் ஏற்கும்.

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெடின் நிர்வாக இயக்குநர் திரு. மகேஷ் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தரமான மருத்துவ சேவையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். இந்த முயற்சி எங்கள் முக்கிய மதிப்பீடுகளான அக்கறை, சேவையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு சுகாதார வசதிகளை எடுத்துச்செல்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி தேசிய அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வுக்கான ஐக்கிய நாடுகளின் நிலைத்த வளர்ச்சி இலக்குகளையும் ஆதரிக்கிறது” என்றார்.

அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டிற்கான கோடக் லைஃப் மொத்த கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த முன்முயற்சிகள் எம்.எம்.வி.கள் மூலம் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, கண் பரிசோதனை முகாம்கள் மூலம் கண் சிகிச்சை வழங்குவதில் முதன்மையாகக் கவனம் செலுத்துகிறது. மேலும், கண் பராமரிப்பு, சிறுநீரக பராமரிப்புக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் மருத்துவமனைகளுக்கும் கோடக் லைஃப் ஆதரவு வழங்கியுள்ளது.

கூடுதல் தகவல்களுக்குப் பாருங்கள்: www.kotaklife.com