தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச் செயலாளராக விக்னேஷ் மாஜினி நியமிக்கப்பட்டுள்ளதாக சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பின் தலைவர் ஜான் அமலன் அறிவிப்பு

0
112
தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச் செயலாளராக விக்னேஷ் மாஜினி நியமிக்கப்பட்டுள்ளதாக சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பின் தலைவர் ஜான் அமலன் அறிவிப்பு. மேலும் 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப்(Tamilnadu state championship… U19) கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி துபாய் நாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 சென்னை தேனாம்பேட்டையில் சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான் அமலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
 தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச் செயலாளராக விக்னேஷ் மாஜினி  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 நான்கு பேர் இப்பதவிக்கு போட்டியிட்ட நிலையில் விக்னேஷ் மாஜினி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது திறமை மற்றும் கிரிக்கெட் போட்டியின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் கிரிக்கெட் வீரரும் கூட வறுமையின் காரணமாக கிரிக்கெட் போட்டியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தார்.
 சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக கோயம்புத்தூர் பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிகள் செய்து வருவதாக கூறினார்.
 எங்களது அமைப்பின் மூலம் பின்புலம் இல்லாத  திறமையான ஏழை எளிய  பள்ளி  மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
 எங்களது அமைப்பின் சார்பாக 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாகவும் அதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி துபாய் நாட்டில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் கிரிக்கெட் வீரர்களின் விமான பயண செலவு தங்குமிடம் உணவு என அனைத்து செலவுகளையும் எங்களது அமைப்பே ஏற்கும் என கூறினார்
 இறுதிப் போட்டி சென்னையில் நடத்தாமல் துபாய் நாட்டில் நடத்துவதன் காரணம் தமிழக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச மைதானங்களில் விளையாடும்போது அவர்களுக்கான அனுபவம் அதிகமாகும் என்பதன் காரணமாகவே இறுதிப்போட்டி வெளிநாடுகளில் நடத்தப்படுவதாக கூறினார்.
 இந்த இறுதிப் போட்டியின்போது தங்களுடன் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளதாக கூறினார்
 தங்களது முயற்சிகளுக்கு தமிழக அரசு  பக்கபலமாக இருக்கும் என நம்புவதாக கூறினார்.
 அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள விக்னேஷ்  மாஜினி பேசுகையில்
தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்…  எனது பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன் திறமையான ஏழை-எளிய மாணவர்களை கண்டறிந்து கிரிக்கெட் போட்டியில் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என கூறினார்.