Triumph உலக சாதனையை 319 மாணவர்கள், 319 வகையான உணவுகளை 4.27 நிமிடங்களில் சமைத்து படையல் சிவக்குமார் உலக சாதனை படைத்தார்

0
229

Triumph உலக சாதனையை 319 மாணவர்கள், 319 வகையான உணவுகளை 4.27 நிமிடங்களில் சமைத்து படையல் சிவக்குமார் உலக சாதனை படைத்தார்

எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டின்  பேராதரவில் , பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தன்னிகரில்லா ஆத்மார்த்தமான உழைப்பிலும் , பெருமுயற்சியில் , முனைவர் படையல் சிவக்குமார் உலக சாதனை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்றது..
Flame off No Oil – No Boil என்ற இந்த உலக சாதனை நிகழ்வை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆத்மார்த்த சீடரும் , விஞ்ஞானியுமான Dr C அழகர் ராமானுஜம்  அவர்கள் தலைமை தாங்கினார்..
இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வில் இயற்கை காய்கறிகள் , தெய்வீக மலர்கள் , மூலிகைகள் , பாரம்பரிய மற்றும் சிறுதானிய அவல் வகைகள் , பழங்கள் போன்ற உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்தி அடுப்பில்லாமல் , எண்ணெயில்லாமல் , பால் மற்றும் பால் பொருட்கள்இன்றி, எந்த வித ரசாயனங்களும் இல்லாமல்…No Oil No Boil என்ற முறையில் சுவைமிகு பாரம்பரிய லட்டு வகைகள்,  உயிர் ஆற்றல் மிகுந்த முளைதானிய பயறு வகைகள் , ,காய்கறி பிரட்டல் வகைகள்   காய்கறி சாண்ட்விச் வகைகள்.  காய்கறிகளில்  வகையான பசும்பொறியல் வகைகள் ,  சிறுதானிய , மற்றும் பாரம்பரிய புட்டு வகைகள், சிறுதானிய கிச்சடி ,   எண்ணையில் பொரிக்காத வடை ,  வேகவைக்காத பாரம்பரிய கொழுக்கட்டை , இயற்கை பாரம்பரிய கலவை சாதங்கள் , சுவையும் , ஆற்றலும் மிகுந்த பாதாம் பிசின் மற்றும் மலர்களில் பாயாச வகைகள் , பால் இல்லா இயற்கை சைவ மோர் வகைகள் என மிக பிரம்மாண்டமாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு லிருந்து வருகை தந்த மாணவர்களுடன் எலைட் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களும் இணைந்து 319 மாணவர்கள் , 319 இயற்கை உணவு வகைகள் , 4.27 நிமிடங்களில் இயற்கை உணவு வகைகளை,  வகை வகையாய் , வண்ணமயமாய். , அடுப்பில்லாமல் , எண்ணெயில்லாமல் சமைத்து உலக சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனையை Triumph உலக சாதனை நிறுவனம் மதிப்பீடு செய்து , உலக சாதனைக்கான சான்றிதழை  வழங்கி சிறப்பித்தது..
வருங்கால தலைமுறையினரான குழந்தைகள் அதிலும் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு முறை , இயற்கை வாழ்வியல் முறை , பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு முறையை அறிமுகப்படுத்தி பின்பற்ற செய்யவே இந்த மாபெரும் நிகழ்வு நடத்தப்பட்டது..