வருமான வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

0
171

வருமான வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

சென்னை,

வருமான வரி கூடுதல் ஆணையர், TDS சரகம்-3, சென்னை திரு M அர்ஜுன் மாணிக்  அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில்,   சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகம் , வரிப்பிடித்தம் சரகம்-3, சென்னை, மற்றும்  ஷ்ரேயாஸ் மேனேஜ்மென்ட் கன்சுலேட்டிங் சர்வீசஸ் குழுமமும் இணைந்து, வருமான வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி,  வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கத்தினை 15-02-2024 (வியாழன்) அன்று சென்னையில் நடத்தினர்.

 பட்டய கணக்காளர் திரு J  ஸ்ரீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர், திரு R ராஜாமனோகர், வருமானவரி துணை ஆணையர் அணிந்துரை வழங்கினார்.  அவர் தமது உரையில் , அனைத்து உகந்த செலவீனம் செய்யும் பொழுதும், உரிய விகிதத்தில்  வருமானவரிப் பிடித்தம் செய்யவேண்டிய அவசியம், வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்தவேண்டிய கட்டாயம், TDS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய  தேவை, இவைகள் குறித்து தெளிவாக விளக்கினார்.

வழக்கறிஞர் திரு N V பாலாஜி சிறப்புரை ஆற்றினார் – வருமானவரி அலுவலர்கள் திரு L ராஜாராமன், திரு K செந்தில் குமார் & திரு T V ஸ்ரீதர் வருமானவரி சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை தெளிவாக விளக்கினார்.  மேலும், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகளை பட்டியலிட்டனர். வரிப்பிடித்தம் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை எடுத்துரைத்தனர் .

கீழ்கண்ட விஷயங்களை, வரிப்பிடித்தம் செய்பர்களுக்கான செய்தியாக (MESSAGE) வழங்கினார்.

  1. முறையான வருமானவரிப்பிடித்தம்
  2. காலக்கெடுக்குள் வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல்
  3. சரியான காலாண்டு படிவம்
  4. நேரத்தே சான்றிதழ் வழங்குதல்

திருமதி ஜானகி கார்த்திகேயன், வருமானவரி ஆலோசகர் , TRACES தளத்தில், வரிப்பிடித்தம் செய்பவர்கள் கையளவேண்டிய நடவடிக்கைகளை தெளிவாக விளக்கினார்.

பட்டய கணக்காளர் திரு T R ஸ்ரீனிவாசன் நன்றி பாராட்டினார்.

பட்டய கணக்காளர் திரு சுந்தர் ராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்

வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான நலன் கருதி ,சென்னை தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம்) மேற்கொண்ட கீழ்கண்ட நடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

  1. வரிப்பிடித்தம் துண்டு பிரசுரம் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.
  2. வரிப்பிடித்தம் கையேடு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) – மென் நகல் வழங்கப்பட்டது.
  3. TRACESதளம் குறித்த காணொலிகள் (தமிழ்) – வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வYOUTUBE சேனல் –

https://youtube.com/@incometaxtamilnaduandpuduc9090

  1. செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டTDS CHATBOT (TDS நண்பன்) – ஆண்ட்ராய்டு மற்றும் iOS  பயன்பாட்டாளர்களுக்கு உபயோகத்தில் உள்ளது.

இந்த கருத்தரங்கத்தில்  பல்வேறு தொழில் செய்யும் 120க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.