கோவிட் பொதுமுடக்கத்தின் சோதனையான காலகட்டத்திலும், 2020-21-இன் முதல் காலாண்டில் ரூ 146.59 கோடி என்னும் பாராட்டத்தக்க விற்பனையை BPPI எட்டியுள்ளது
இந்திய மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகமான BPPI (Bureau Of Pharma PSUs Of India), பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் செயல்படுத்தும் முகமையாகும்.
கோவிட் பொதுமுடக்கத்தின் சோதனையான காலகட்டத்திலும், 2020-21-இன் முதல் காலாண்டில் ரூ 146.59 கோடி என்னும் பாராட்டத்தக்க விற்பனையை BPPI எட்டியுள்ளது. 2019-20-இன் இதே காலகட்டத்தில் இதன் விற்பனை ரூ 75.48 கோடியாக இருந்தது.
பொதுமுடக்கத்தின் போது தொடர்ந்து இயங்கிய மக்கள் மருந்துகங்கள், அத்தியாவசிய மருந்துகளின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்தன. 15 லட்சம் முகக்கவசங்களையும், 80 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், 100 லட்சம் பாரசிட்டமால் மாத்திரைகளையும் விற்று, ரூ 1260 கோடி பணத்தை மக்களுக்கு மிச்சப்படுத்தின.
உலகின் மிகப்பெரிய சில்லரை மருந்தகக் குழுமமான பிரதமரின் மக்கள் மருந்தகங்கள், நிலையான மற்றும் தொடர் வருமானம் உள்ள சுய வேலைவாய்ப்பையும் வழங்குகின்றன.