கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை

0
348

கும்மிடிபூண்டியில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்திய சிமென்ட் நிறுவனத்தில் இந்தியத் தரநிர்ணய அமைப்பு அதிகாரிகள் சோதனை

சென்னை: ததய கண்டிகை, நெமலூர் கிராமம், கும்மிடிபூண்டி, திருவள்ளூர் – 601 202-இல் உள்ள எம்/எஸ் டெக்ஸ்மோ சிமென்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், சிமென்ட் (தர கட்டுப்பாடு) உத்தரவு 2003-ஐ மீறியதாகவும், இந்தியத் தரநிர்ணய அமைப்பின் குறியீடு மற்றும் இந்தியத் தரநிர்ணய அமைப்பு முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வந்தன. அதனடிப்படையில், சென்னை- 600 113-இல் உள்ள இந்தியத் தர நிர்ணய அமைப்பின் தெற்குப் பிராந்திய அலுவலக அதிகாரிகள் குழு, ஆய்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஆகஸ்ட் 14, 2020-இல் ஈடுபட்டது.

இந்தச் சோதனையின் போது, இந்தியத் தரநிர்ணயச் சான்றிதழ் குறியீடு உரிமம் இல்லாமல், சிமென்ட்களை அடைப்பதற்காக இந்தியத் தரநிர்ணய ஆணையக் குறியீடு மற்றும் இந்தியத் தரநிர்ணய ஆணைய முத்திரையுடன் பல்வேறு பிராண்டுகளின் பெயர்களில் இருந்த 33,000 காலிப்பைகள் மற்றும் ஓபிசி 53 தரம் மற்றும் பிபிசி (பறக்கும் சாம்பல் அடிப்படையிலான) சிமென்ட்கள் நிரப்பப்பட்ட 110 பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தரநிர்ணய அமைப்புச் சட்டம், 2016-இன் பிரிவு 17(1) மற்றும் 17(3)-ஐ மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குற்றம் செய்தவர் மீது இந்தியத் தரநிர்ணயச் சட்டம் 2016-இன் கீழ் இந்தியத் தரநிர்ணய அமைப்பின் தெற்குப் பிராந்திய அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்முறை கண்டுபிடிக்கப்படும் தவறான நடவடிக்கைகளுக்கு இந்தியத் தரநிர்ணய அமைப்புச் சட்டத்தின் பிரிவு 29-இன் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ALSO READ:

BIS RAIDS A CEMENT UNIT MISUSING ISI MARK AT GUMMIDIPOONDI

தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறும் வகையிலான ஏதாவது சம்பவங்களைப் பார்த்தால், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு தெரு, தரமணி, சென்னை – 600113-இல் உள்ள இந்தியத் தரநிர்ணய அமைப்பின் தெற்குப் பிராந்திய அலுவலகத்துக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது போன்ற புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22541087 என்ற எண்ணுக்கு தொலை நகல் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு இந்தியத் தர்நிர்ணய அமைப்பின் தெற்குப் பிராந்தியத்தின் சென்னை அலுவலகத்தை 044 – 22541220 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்தியத் தரநிர்ணய அமைப்பு குறித்த தகவல்களை www.bis.gov.in என்ற இந்தியத் தரநிர்ணய அமைப்பின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

சோதனை குறித்த மேலும் தகவல்களுக்கு டி பிரிவு விஞ்ஞானி ஜோஷ் சார்லஸை 95676 43978 என்ற எண்ணிலோ அல்லது சி பிரிவு விஞ்ஞானி  அறிவழகனை 98401 50432 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.