எதிர்காலத்தில் கொண்டைக்கடலை பயிரில் ஏற்படக் கூடிய வறண்ட வேர் அழுகல் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடிய மண்ணில் வளரும் தாவரநோய் கிருமிகளுக்கு பருவநிலை மாற்றம் சாதகமாக இருக்கும்

0
130

எதிர்காலத்தில் கொண்டைக்கடலை பயிரில் ஏற்படக் கூடிய வறண்ட வேர் அழுகல் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடிய மண்ணில் வளரும் தாவரநோய் கிருமிகளுக்கு பருவநிலை மாற்றம் சாதகமாக இருக்கும்

புதுதில்லிகொண்டைக்கடலை பயிரின் வேர் அல்லது தண்டுப் பகுதியைத் தாக்கக் கூடிய வறண்ட வேர் அழுகல் நோய்க்கு, அதிக வெப்பநிலை வறட்சி சூழல் மற்றும் குறைவான மண் ஈரத்தன்மை போன்ற சூழல்கள் சாதகமாக இருக்கும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கவும், மேம்பட்ட பயிர் மேலாண்மை உத்திகளை வகுக்கவும் உதவிகரமாக இருக்கும்.

வறண்ட வேர் அழுகல் நோய், பயிரின் வீரியத்தைக் குறைப்பதோடு, பழுப்படைந்த பச்சை இலை நிறம், மோசமான புதிய வளர்ச்சி மற்றும் கிளைக் கொல்லி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வேர் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டால், இலைகள் உடனடியாக வாடிவிடுவதுடன் மரத்திலேயே உலர்ந்துவிடும். உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பது, நாம் இதுவரை  கேள்விபட்டிராத அளவுக்கு நோய்க்கிருமிகளை உருவாக்கக் கூடிய புதிய தாவர நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். இந்த நோய் கொண்டைக்கடலை பயிரின் வேர் அழுக வழிவகுக்கும். தற்போது இந்தியாவின் மத்திய மற்றும் தென்மாநிலங்கள், இந்த நோய் பாதிப்பு 5 – 35% ஏற்படக் கூடிய  பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நோய் கிருமி ஏற்படுத்தப்படக் கூடிய பாதிப்பின் அளவை கருத்தில் கொள்வேமேயானால், வெகுவிரைவில் பெருந்தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு உள்ளதால், இது தொடர்பான பின்னணியைக் கண்டறியும் ஆராய்ச்சியில் இக்ரிசாட் நிறுவனத்தின் டாக்டர் மம்தா சர்மா தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பு மற்றும்  நிதியுதவி அளித்து வருகிறது.

Publication links:

https://doi.org/10.3389/fpls.2021.653265

https://www.icrisat.org/icrisat happenings

For more details, Dr. Mamta Sharma ([email protected]) can be contacted.