மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் கூடிய புனேவில் உள்ள வென்ச்சர் மையம் தேசிய வசதி இப்போது செயல்பாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது

0
434

மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் கூடிய புனேவில் உள்ள வென்ச்சர் மையம் தேசிய வசதி இப்போது செயல்பாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது

PIB Chennai: ஆதரவுடன் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (Biotechnology Industry Research Assistance Council – BIRAC) ஆதரவுடன் உயிரி மருந்தாளுமை பகுப்பாய்வு மையம் (National Biopharma Mission – NBM) of Department of Biotechnology (DBT) மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் தேசிய உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தின் (Center for Biopharma Analysis – CBA) தொழில்நுட்ப வர்த்தக இன்குபேட்டர் வென்ச்சர் மையத்தை புனேவில் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் இன்று மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் துவக்கி வைத்தார்.

உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வுச் சேவைகளை சி பி ஏ வழங்கும். உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இந்த மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரி தொழில் முனைவோர்களுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே நீண்ட காலம் மதிப்பளிக்கக்கூடியதாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:

DEPARTMENT OF BIOTECHNOLOGY SUPPORTED NATIONAL FACILITY AT VENTURE CENTER, PUNE NOW OPEN FOR OPERATIONS

காணொளி மாநாடு மூலமாக மையத்தைத் துவக்கி வைத்த டாக்டர், ரேணு ஸ்வரூப் உயிரி மருந்தாளுமைத் துறையில், புதுமைகளை ஊக்குவித்து ஆதரவளிக்க சி பி ஏ முக்கிய பங்காற்றும் என்று தாம் நம்புவதாகக் கூறினார். கல்விக்கூடங்கள், அரசு ஆய்வுக்கூடங்கள், புதிதாக உருவாகும் நிறுவனங்கள், பல்வேறு இந்திய நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கும் உரிமைகளுக்கு உயர்ந்த தரத்திலான பகுப்பாய்வுத் தன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இவை தொடர்பான கட்டுப்பாட்டு விதிமுறை ஒப்புதல்கள் குறித்தும் ஆலோசனை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார். இதனால் வளர்ச்சி வழிமுறைகள் மேலும் விரைவுபடுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள மத்திய உயிரி தொழில்நுட்ப துறை பி ஐஆர் ஏ சி தகவல் தொடர்பு மையம்