நாட்டை அதிக காலம் ஆண்ட நான்காவது பிரதமர் நரேந்திர மோடி

0
200

நாட்டை அதிக காலம் ஆண்ட நான்காவது பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை அதிக காலம் ஆண்ட நான்காவது பிரதமர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தியுள்ளார். அத்துடன் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 2 ஆயிரத்து 268 நாட்கள் ஆட்சி என்ற சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு பிரதமர் அதிகநாட்கள் ஆட்சியில் இருப்பதும் மற்றும் ஒரு சாதனையாகும். அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சி செய்த மொத்த நாட்களை விடவும் அதிக நாட்கள் பிரதமர் மோடி பிரதமராக நீடித்துள்ளார்.

67 வயதாகும் பிரதமர் மோடி வியாழனன்று இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.