தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு- முதல்வர் ஸ்டாலின்

0
74

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெறும்.

இந்த அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. சங்க கால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்கள புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.