ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி

0
278

ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி

சென்னை: இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

சென்னைப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக ராஞ்சியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார் தோனி. இதன் முடிவில் தோனிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சி.எஸ்.கே. கேப்டன் தோனி ராஞ்சியில் இருந்து இன்று சென்னை வந்தடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சிஎஸ்கே வீரர்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பயிற்சிக்கு பிறகு வருகின்ற ஆகஸ்ட் 21 தேதி சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்படுகின்றனர்.