இந்தியாவை பல மாநிலங்களாக, பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

0
150

இந்தியாவை பல மாநிலங்களாக, பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவை பல மாநிலங்களாக பிரித்துப்பார்க்காமல் ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும் எனவும், அப்போது தான் அனைத்து துறைகளிலும் இந்தியாவை முழுமையாக மேம்படுத்த முடியும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம், பல்கலை துணை வேந்தர் ஜெ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழா நெறிமுறைகள் மீறி மத்திய இணை அமைச்சர் முருகனை கௌரவ விருந்தினராக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலை இணை வேந்தருமான பொன்முடி விழாவை புறக்கணித்திருந்த நிலையில், வரவேற்புரை வாசித்த துணை வேந்தர் அவரின் பெயரை குறிப்பிட்டார். ஆனால், ஆளுநரும், இணை அமைச்சரும் அவரது பெயரை தவிர்த்து விட்டனர்.