நிலைமறந்தவன் விமர்சனம்: மத வியாபாரிகளின் மோசடிகளை தோலுரித்து காட்டுகிறான் இந்த நிலை மறந்தவன் |மதிப்பீடு: 3/5

0
344

நிலைமறந்தவன் விமர்சனம்:

மத வியாபாரிகளின் மோசடிகளை தோலுரித்து காட்டுகிறான் இந்த நிலை மறந்தவன் |மதிப்பீடு: 3/5

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட படம் ட்ரான்ஸ். தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் சார்பில் தமிழில் டப் செய்து வெளியாகி இருக்கும் படம் நிலை மறந்தவன். அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க திமிரு படத்தில் நடித்த விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம், ஒளிப்பதிவு – அமல் நீரத், படத்தொகுப்பு – பிரவீன் பிரபாகர், வசனம் – சிவமணி, தயாரிப்பு – தர்மா வி{வல் கிரியேஷன்ஸ், இயக்கம் – அன்வர் ரஷீத், மக்கள் தொடர்பு – KSK செல்வா.

சிறு வயதிலேயே வாழ்வில் இக்கட்டான தருணங்களை சந்தித்து விட்டு அற்புதம் நிகழ காத்திருப்பவர் விஜு பிரசாத் (பஹத் பாசில்). இளம் வயதில் தாயை இழக்கும் விஜு மன அழுத்தத்துக்கு ஆளான தன் தம்பியுடன் கன்னியாகுமரியின் கடலோர பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டே பகுதி நேர பேச்சாளராகவும் இருக்கிறார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சோக சம்பவம் விஜுவின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது.அதாவது, மன அழுத்தத்துக்கு ஆளான தம்பியும் பருவ வயதில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்கிறான். இதனால், விஜு பிரசாத்தும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறான். எனவே, பழைய நினைவுகளை மறக்க மும்பைக்குச் செல்கிறான். இங்குதான் மதம் மாற்றும் மாஃபியா கும்பலிடம் சிக்குகிறான். ஒருவர் கௌதம் மேனன் மற்றும் செம்பான் வினோத். இவர்கள் இருவரும் ஹீரோவின் ப்ளாஷ் பேக்கை பற்றி தெரிந்து கெண்டு, அவனை இன்டர்வியூவுக்கு அழைக்க அங்குதான் அவனுக்கு மக்களை மதம் மாற்றி பணம் சம்பாதிக்கும் பிளான் சொல்லப்படுகிறது. பயந்துபோன ஹீரோ, இதனால் பிரச்னை வராதா? என்று அப்பாவியாகக் கேட்க, நமக்கு பாதுகாப்புத் தருவதற்கென்று அரசாங்கத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி அவனை இருவரும் மறைமுகமாக மிரட்டி பணிய வைத்து பாதிரியார் ட்ரெயினிங் கொடுக்கப்பட்டுகிறது. ட்ரெயினிங் முடிந்ததும் ஜீவ பிரசாத் என்கிற ஹிந்து ஏழை, ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் என பெயர் மாற்றம் பெறுகிறான். மதத்தின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதிப்பது தான் கௌதம் மேனனின் திட்டம். ஆறு மாத பயிற்சி முடிந்ததும் ஜீவ பிரசாத் என்கிற ஹிந்து ஏழை, ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் என பெயர் மாற்றம் பெறுகிறான். பின்பு மேடை பிரசங்கங்களில் வெளுத்து வாங்குகிறார் பஹத் பாசில்.  ட்ரெயினிங் முடிந்ததும் ஜீவ பிரசாத் என்கிற ஹிந்து ஏழை, ஃபாஸ்டர் ஜோஸ்வா கால்டன் என பெயர் மாற்றம் பெறுகிறான். இதன் பிறகு, அவனை மதம் மாற்றும் மாஃபியா கும்பல் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது, மக்களை எப்படி எல்லாம் மூளைச்சலவை செய்து முட்டாளாக்கி  கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பஹத் பாசிலின் புகழ் அதிகமாக, கௌதம் மேனனின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட நினைக்கும் பஹத் பாசில் தனது பப்ளிசிட்டிக்காக டிவி பேட்டி ஒன்றில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி திடீரென லைவ் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் ஏதாவது ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் பஹத் பாசில். ஆனால் சமயோசிதமாக அந்த சவாலை பஹத் பாசில் எதிர்கொண்டாலும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் கௌதம் மேனனின் கோபத்திற்கு ஆளாகி அவரால் தாக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறார் அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.

ஃபஹத் ஃபாசில் முதலில் விஜுவாக இருக்கும்போது ஒரு சராசரி மனிதனாக, தோல்வியுற்றவனாக, படத்தின் ஆரம்பக் காட்சியில் அவரது நடை,உடை,பாவனைகள் இருக்கும். தன்னை கண்ணாடியில் பார்த்து, ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்ட உற்சாகத்துடன் நான் எப்படியும் ஜெயிப்பேன் என்ற உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு தீவிரமான இளைஞனை அச்சு அசலாக நம் கண் முன் நிறுத்துகிறார். பின்னர் மதபோதகர் ஃபாஸ்டர் ஜோஸ்வா கார்ல்டனாக அவதாரம் எடுத்தபின்னர், ஏகப்பபட்ட வித்தியாசங்கள். மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் ஒரு காட்சியில், நார்கோஸ்டிக் மனநிலையை மிகத் துல்லியமாக காண்பித்திருப்பார்.  உடல்மொழியிலும் வசன உச்சரிப்புகளை அச்சு அசலான மதபோதகர் ஒருவரை கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார். மிக பெரிய கலைஞன் பஹத் பாசில்.

திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியா இடைவேளைக்குப் பிறகே வந்தாலும் குறை சொல்லமுடியாத நடிப்பு. வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன். கொடுக்கப்பட்ட பாத்திரமாக கச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ், திலீஷ் போத்தன், ஷெளபின் ஷபிர்,ஸ்ரீநாத் பாசி  உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார்கள்.

நேரடி தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவமணியின் வசனங்கள் அமைந்துள்ளன.

அமல் நீரத்தின் ஒளிப்பதிவும், சுஷின் ஷ்யாம்-ஜாக்சன் விஜயனின் பின்னணி இசையும் இணைந்து மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி மூட நம்பிக்கைகளால் அவர்கள் உயிருடன் விளையாடும் மத வியாபார கும்பலை மையமாக வைத்து அச்சமற்ற மற்றும் சமரசமற்ற அன்வர் ரஷீத்தின் இயக்கம் வின்சென்ட் வடக்கன் எழுதிய திரைக்கதையை உயர்த்துகிறது. பிரவீன் பிரபாகரின் படத்தொகுப்பும் சினிமா அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மொத்தத்தில் தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள நிலை மறந்தவன், மத வியாபாரிகளின் மோசடிகளை தோலுரித்து காட்டி மக்களின் பயத்தை தெளிய வைத்து  மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறான் இந்த நிலை மறந்தவன்.