2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 44 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் செய்துள்ளார்

0
100

2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 44 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் செய்துள்ளார்

புதுதில்லி,

2017-ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மேற்கொண்ட பயணம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் (www.pmindia.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு வரை 44 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர்  பயணம் செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு 4 முறையும், 2018-ஆம் ஆண்டு 11 முறையும், 2019-ஆம் ஆண்டு 11 முறையும், 2020 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2021ம் ஆண்டு 9 முறையும், 2022-ஆம் ஆண்டு 8 முறையும் பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இத்தகவலை  வடகிழக்கு பிராந்தியங்கள் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.