நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்: தயாரிப்பாளர் K ராஜன் வருத்தம்!

0
181

நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்: தயாரிப்பாளர் K ராஜன் வருத்தம்!

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் “முதல் மனிதன்” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…

துணிச்சலோடு இந்தபடத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜதுரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தில் கேமரா மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் அல்ல மக்களுக்கு நல்ல பாடம். இந்தப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனக்கு தெரிந்து எங்குமே ஜாதி இல்லை, தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலை தான் இப்போது இருக்கிறது.

இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயந்தாரா ஷூட்டிங் வந்தால் 7 அஸிஸ்டெண்ட், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை ஆனால் பாம்பேவில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார். இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி வந்தால் ஸ்பாட்டிலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார் அவர்கள் தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களையெல்லாம் என்ன சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்து சொல்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்.

இந்தப்படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று தர வேண்டும், சினிமா நன்றாக இருக்கிறது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று ‘டாக்டர்’ திரைப்படம் தான். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 40 கோடி படம் 60 கோடி பட்ஜெட் ஆகி, சிவகார்த்திகேயன் அதற்கு பொறுப்பெடுத்துகொண்டார், அதற்கு யார் காராணம், திரிஷா நடித்த படத்திற்கு விழாவிற்கு வர 15 லட்சம் கேட்கிறார்.

வெற்றிபெற்ற பிறகு ஆடியோ பங்சனுக்கு வர மாட்டேன் என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பராவயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.