தெலங்கானா மாநிலத்தின் மேதாரம் ஜதாரா திருவிழாவை மீண்டும் உற்சாகமாக நடத்த ரூ.2.26 கோடி ஒதுக்கீடு 

0
122

தெலங்கானா மாநிலத்தின் மேதாரம் ஜதாரா திருவிழாவை மீண்டும் உற்சாகமாக நடத்த  பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் உதவி : ரூ.2.26 கோடி ஒதுக்கீடு 

புதுதில்லி, தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் நடத்தும் மேதாரம் ஜதாரா திருவிழாவை மீண்டும் உற்சாகமாக நடத்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ரூ..2.26 கோடி நிதி ஒதுக்கியுள்ளது

தெலங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடியினர்,  மேதாராம் ஜதாரா என்ற திருவிழாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடுவர்.  கோயா பழங்குடியினர் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். இந்த விழாவை உற்சாகத்துடன் மீண்டும் கொண்டாடவும், பிரபலப்படுத்தவும், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் கோயா திருவிழாக்கள், மாநில அளவிலான போட்டிகள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொருளாளதார உதவி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய திருவிழா மேதாரம் ஜதாரா.

கடந்த 2018, 2020ம் ஆண்டுகளில் இந்த விழாவுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தலா ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது.

மேதாரம் ஜதாரா திருவிழா நடைபெறும் காலத்தில், பழங்குடியினர் மக்கள் தங்குவதற்கான கட்டிடங்கள் கட்ட கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.7 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.5 கோடியையும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஒதுக்கியது.

தெலங்கான அரசின் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து, தற்போது, ஜதாரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ரூ.2.26 கோடி வழங்கியுள்ளது. இந்தாண்டு விழா பிப்ரவரி 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விழா அரசு விழாவாக கடந்த 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு நடத்தப்படும் பழங்குடியினர் நடன விழாவை, வீடியோ ஆவணமாக தயாரிக்கவும், ஊடங்களில் பிரபலப்படுத்தவும், இந்த விழாவுக்கான நிதி பயன்படுத்தப்பட்டது.

தேவி சமக்கா மற்றும் தேவி சரலம்மா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மேதாரம் ஜதாரா விழாவை பழங்குடியின மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் பல கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள்  கூடுவர்.

 இந்த விழாவின் பார்வையாளர்கள் மற்றும் தெலங்கானா பழங்குடியின மக்கள் இடையே விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்க பிணைப்பை ஏற்படுத்தவும், இந்த விழாவுக்கு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து நிதியுதவி அளிக்கிறது.