தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை -முதல்வர் தொடங்கி வைத்தார்

0
266

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை -முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தனி மாவட்டம் வேண்டும் என்ற கால் நூற்றாண்டு காலகனவு நனவானதால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.