மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0
144

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள பாஜக தலைவர் எல்.முருகனை தொலைபேசி வாயிலாக அழைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

இதில், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார். எனினும், 20 ஆண்டுகள் கழித்து பாஜக தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில், 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவரான எல்.முருகனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை 6 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது. எல். முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வைத்தார். எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் தகவல் & ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பு அரசியல்வாதிகள் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாகரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.