சென்னை சிந்தாதரிப்பேட்டையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

0
179

சென்னை சிந்தாதரிப்பேட்டையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்திய தாய்த்திரு நாட்டின் 73வது குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முப்படைத் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்என் ரவி

73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் மரியாதை செலுத்தினார். சென்னை போர்நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

கொரோனா பரவல் காரணமாக மிகுந்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை காண அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை சிந்தாதரிப்பேட்டை, கிருஷ்ணப்ப தொருவில் பொது மக்கள் குழந்தைகளுடன் 73வது குடியரசு தினவிழாவை இன்று (ஜனவரி 26) சிறப்பாக கொண்டாடினார்கள்.

விழாவில் E. உஷா லில்லி வில்லியம் சென்னை சிந்தாதரிப்பேட்டை F-1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு N.ஜெயந்தி நரேந்திரன் (மாவட்ட துணை செயலாளர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் தொகுதி) முன்நிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த விழாவில், பொதுமக்கள் பலரும் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் சுதந்திர போராட்ட வீர‌ர்கள், தேச தலைவர்கள் வேடத்தில் கலந்து கொண்டனர்.  விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.