உள்ளாட்சித் தேர்தல் 2022: எளிமையாக வந்து வாக்களித்த நடிகர் விஜய்

0
163

உள்ளாட்சித் தேர்தல் 2022: எளிமையாக வந்து வாக்களித்த நடிகர் விஜய்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் எளிமையாக வந்து தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் நடிகர் விஜய் காலையிலேயே வந்து வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்கு செலுத்தியிருந்தார். பெட்ரோல் – டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அப்போது பேசப்பட்டது. சமூக ஊடகத்திலும் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்த வீடியோ வைரலானது.

இந்நிலையில், இன்று காலை சிகப்பு நிற maruti celerio காரில் எளிமையாக வந்த நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். பொதுமக்கள் அதிகம் கூடியதை தொடர்ந்து அவர் வரிசையில் நின்று வாக்களிக்காமல் நேரடியாக வாக்குசாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

அதே போல் நடிகர் மன்சூர் அலிகான், அரும்பாக்கம் திருவடி துவக்கப் பள்ளியில் தனது ஓட்டை பதிவு செய்தார்!